தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்றைய நிலவரம் என்ன? உயர்ந்ததா? குறைந்ததா?

Published : Jan 15, 2025, 11:32 AM ISTUpdated : Jan 15, 2025, 11:34 AM IST

தங்கம் விலை நேற்று சவரன் ரூ.58,640-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.80 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.7,340-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.

PREV
15
தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்றைய நிலவரம் என்ன? உயர்ந்ததா? குறைந்ததா?
Gold Rate

தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவா வேண்டும். குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

25
Gold Price

அந்த வகையில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் தங்க  நகைக்கடைகளில் கூட்டம் எந்நேரமும் அலைமோதுகிறது. இதற்கு முக்கிய காரணம் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். எனவே தற்போதே தங்கத்தை வாங்கி வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற அடிப்படையில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். மேலும் அவரச தேவை என்றால் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தங்க நகையை அடகு கடைகளில் வைக்கவும் உதவுகிறது. 

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! அடுத்த 12 நாட்கள் லீவே இல்லை! தொடர்ந்து ஸ்கூல் தான்!

35
Yesterday Gold Rate

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் ஜனவரி மாதத்திலும் அதே நிலையே நீடிக்கிறது. அதாவது நேற்று தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.58,640-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.7,330-க்கு விற்பனையானது. 

45
Today Gold Rate

இன்றைய (ஜனவரி 15) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,340-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 8,006-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.64,048-ஆக விற்பனையாகிறது. 

55
Today Silver Rate

வெள்ளி விலை ஒரு ரூபாய்  உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.101.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories