தாறுமாறாக மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! இன்று ஒரு சவரன் விலை இவ்வளவா.?

First Published | Jan 9, 2025, 9:43 AM IST

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல்வேறு காரணங்களால், வரும் காலங்களில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என்று கணிக்கப்படுகிறது. தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தங்கத்தின் விலை 58ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. 

gold rate

தங்கத்தின் மீதான இந்திய மக்களின் ஆர்வம்

தங்கத்தின் மீதான ஆர்வம்  மக்களிடம் எப்போதும் குறைந்ததில்லை. அந்த வகையில் மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் தான் தங்கத்தை அதிகளவு வாங்கி வருகிறார்கள். குறிப்பாக தங்கத்தின் விலையானது கடந்த 2010 ஆம் ஆண்டு 17ஆயிரம் முதல் 18ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

அடுத்த 14 ஆண்டுகளில் தங்கத்தின் விலையானது 60ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை எட்டும் என கூறப்பட்டு வருகிறது. 
 

gold rate

தங்கத்தின் விலையில் மாற்றம்

அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அமெரிக்க டாலரில் ஏற்பட்ட மாற்றம் தங்கம் விலையின் மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஈரான்-இஸ்ரேல்,  உக்ரைன்- ரஷ்யா இடையிலான மோதல் காரணமாகவும்  அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் காரணமாகவும்  தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்தது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தற்போதே வாங்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகமான மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்கிறார்கள். இதனால் ஏற்படுகின்ற தட்டுப்பாடு காரணமாகவும் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது.
 

Tap to resize

gold rate

அவசர தேவைக்கு தங்கம்

தங்கம் என்பது ஆடம்பர பொருளாக இருந்தாலும் திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் அணிவதற்கு மக்கள் அதிகளவு விருப்பப்படுவார்கள். மேலும் தங்களது பெண் குழந்தைகளில் திருமணத்திற்காகவும் அதிகளவு தங்கம் வாங்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் அவரச தேவைக்கும் தங்க நகைகள் பெரிய அளவில் உதவியாக உள்ளது. உடனடியாக நகைகளை விற்கவோ அல்லது அடமானம் வைக்க முடியும். இதன் காரணமாக அவசர தேவைக்கு உதவும் பொருளாக தங்க நகைகள் உள்ளது. 
 

gold rate today chennai

2025ஆம் ஆண்டில் தங்கம் விலை

இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு தொடக்கமே தங்க நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அந்த வகையில் தங்கத்தின் விலையானது முதல் 3 நாட்கள் தொடர்ந்து உயர்ந்தது. அடுத்த  சில நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாம் ஒரே விலையில் நீடித்தது.

 இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென அதிகரித்தது. அந்த வகையில் ஒரு கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 7ஆயிரத்து 225 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 57ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold rate today

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 7,260 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 58ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை 58ஆயிரம் ரூபாயை தொட்டது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 
 

Latest Videos

click me!