கடந்த சில தினங்களாக அசுர வேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடி சரிவைக் கண்டுள்ளதால் புதிதாக நகை வாங்க விரும்புபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அவர் விதித்த கடுமையான வரி விதிப்பின் விளைவாக இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வபோது புதிய உச்சத்தைதத் தொட்டு நகை பிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
25
gold purchase
தங்கத்தின் விலை கிராம் ரூ.7 ஆயிரம், ரூ.8 ஆயிரம் என புதிய புச்சம் தொட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் தங்கம் ஒவ்வொரு நாளும் உயர்வை கண்டு வருகிறது.
35
ஒவ்வொரு நாளும் உயர்வைக் கண்டு வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்குவது எட்டாக் கனியாக மாறி வருகிறது.
நேற்று அட்சய திருதியைக் கொண்டாடப்பட்ட நிலையில் நியாய விலைக் கடைகளை காட்டிலும் அதிகமான கூட்டத்தை நகைக் கடைகளில் பார்க்க முடிந்தது. நேற்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.8,980க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,840க்கும் விற்கப்பட்டது.
55
Gold Rate Today
இந்நிலையில், மே முதல் தினமான இன்று தங்கத்தின் விலை அதிரடி சரிவைக் கண்டுள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.205 குறைந்து ரூ.8,775க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1640 குறைந்து ரூ.70,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை வீழ்ச்சியால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.