நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.? தங்கம் இன்று ஒரு கிராம் என்ன விலை தெரியுமா.?

First Published | Jan 5, 2025, 9:36 AM IST

2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து, நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

gold rate today

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டின் தொடக்கமே அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்தது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக தங்கத்தின் மீது முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது. எனவே தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்கி வருகிறார்கள். குறிப்பாக இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள். திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் அதிகளவு தங்கத்தை அணிய விரும்புவார்கள். இதன் காரணமாகவே இந்தியாவில் தான் அதிகளவு தங்கம் வாங்கும் மக்கள் உள்ளார்கள்.

GOLD

அவசர தேவைக்கு உதவும் தங்கம்

தங்க நகை கையிருப்பில் இருந்தால் அவசர தேவைக்கு பெரும் உதவியாக இருக்கும் இதன் காரணமாகவும் அதிகமான மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள். குறிப்பாக நகைகளை கடைகளில் எளிதாக விற்கவோ, அடகு வைக்கவோ முடியும், ஆனால் வீடு, கார் போன்றவற்றை உடனடியாக அவசர தேவைக்கு விற்பனை செய்யவோ அடகு வைக்கவோ முடிவதில்லை. இதனால் பெரும்பாலான மக்களின் முதலீடாக தங்கம் உள்ளது.
 

Tap to resize

Gold investment

உச்சத்தை தொடும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் 45 ஆயிரம் ரூபாய் அளவிற்கும், கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 20ஆயிரம் ரூபாய் அளவிற்கும் உயர்ந்துள்ளது. எனவே தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற உச்சத்தை தொட இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை தொடரும் பட்சத்தில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

gold rate

ஏறி இறங்கிய தங்கம் விலை

இந்த நிலையில் கடந்த 2025ஆம் ஆண்டின் தொடக்கமான ஜனவரி 1ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கியது. முதல் நாள்  சவரனுக்கு ரூ.320 அதிகரித்தது, ஜனவரி 2ஆம் தேதி ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்தது. ஜனவரி 3ஆம் தேதி ஒரு சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து  58ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் திடீரென சரிவு ஏற்பட்டது.

gold rate

இன்றைய தங்கம் விலை என்ன.?

இதன் படி நேற்று ஒரு கிராம் ஒன்றுக்கு 45 ரூபாய் குறைந்து  7215-க்கும், சவரனுக்கு ரூ 360 குறைந்து ரூ 57,720-க்கும் விற்பனையானது. இன்று தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே நாளை திங்கட்கிழமை தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

Latest Videos

click me!