தங்கம் வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் கிடு கிடுவென குறைந்த தங்கம் விலை- ஒரு சவரன் இவ்வளவு தானா.?

First Published | Nov 7, 2024, 10:19 AM IST

தங்கத்தின் விலையானது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென குறைந்துள்ளது. இந்த விலை குறைவின் காரணமாக நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தங்கத்தில் முதலீடு

உலகத்திலையே தங்கத்தின் மீதான முதலீடு செய்ய இந்திய மக்கள் தான் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். தங்களது வருங்கால சேமிப்பாகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்வார்கள் . எனவே நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் எப்போதும் நஷ்டப்பட்டதில்லை. அந்தஅளவிற்கு தங்கம் மற்றும் நிலங்கள் பல மடங்கு லாபத்தை கொடுத்து வருகிறது.  தங்கத்தின் மீதான தேவை அதிகரித்திருப்பதால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 

கிடு கிடுவென குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 1,320 குறைந்து 57,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி  கிராமுக்கு 165 குறைந்து 7,200க்கும் ஒரு கிராம் தங்கம் விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன் படி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 1,02,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tap to resize

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

அந்த வகையில் தங்கத்தின் விலையானது தீபாவளி பண்டிகையையொட்டி  உச்சத்தை தொட்டது. குறிப்பாக ஒரு சவரன் 60 ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை நெருங்கியது. கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகை தினத்தில் தங்கம் 60ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டிருந்தது.

பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி

எனவே வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கத்தின் விலையானது குறைந்து வருகிறது. அதன்படி நேற்று 7365 ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இருந்து 7200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்திற்கு மட்டும் 165 குறைந்துள்ளது. இதே போல 8 கிராம் தங்கமான ஒரு சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஆனது கடந்த 10 நாட்களில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை குறைந்து வருவது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Latest Videos

click me!