Published : Apr 17, 2025, 10:24 AM ISTUpdated : Apr 17, 2025, 10:32 AM IST
Gold Prices Reach All-Time High – Check Today’s Latest Rates: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வுக்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
தங்கம் என்ற பெயரை கேட்டாலே பொதுமக்கள் அலறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு சந்தித்து வருகின்றனர்.
26
Tamilnadu Gold Rate
புதிய உச்சத்தில் தங்கம் விலை
இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. இதன் காரணமாக மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் மேலும் குறையும் எதிர்பார்த்த நகைப்பிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.760 உயர்ந்தது.
36
Yesterday gold rate
குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை
அதாவது நேற்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.8,815-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
46
Today Gold Rate
இன்றைய தங்கம் விலை
இன்று (ஏப்ரல் 17) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.8,920-க்கு விற்பனையாகிறது. இதேபோல் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
56
24 Carat Gold
24 கேரட் தங்கம் விலை
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9,730-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.77,840ஆக விற்பனையாகிறது.
66
Today Silver Rate
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மூன்று நாட்களாக எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதாவது கிராம் வெள்ளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.110,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.