ஜென்சோல் கடன் மோசடி: இந்திய ஸ்டார்ட்அப் சூழலில் புயலைக் கிளப்பும் வழக்கு!

Published : Apr 17, 2025, 09:25 AM ISTUpdated : Apr 17, 2025, 09:30 AM IST

ஜென்சோல்-ப்ளூஸ்மார்ட் நிறுவனர்கள் அன்மோல் மற்றும் புனீத் ஜக்கி சகோதரர்கள் நிதி மோசடி மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டதாக SEBI அறிக்கை வெளியிட்டுள்ளது. வணிக மேம்பாட்டிற்கான நிதியை தனிப்பட்ட ஆதாயங்களுக்குப் பயன்படுத்தியதுடன், 30,000 மின்சார வாகன ஆர்டர்கள் பெற்றதாகக் கூறியதும் பொய்யானது என கண்டறியப்பட்டுள்ளது.

PREV
14
ஜென்சோல் கடன் மோசடி: இந்திய ஸ்டார்ட்அப் சூழலில் புயலைக் கிளப்பும் வழக்கு!
Anmol Singh Jaggi and Puneet Singh Jaggi

ஜென்சோல் - ப்ளூஸ்மார்ட் ஊழல்:

ஜென்சோல்-ப்ளூஸ்மார்ட் ஊழல் இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலில் புயலைக் கிளப்பியுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் மின்சார வாகன (EV) புரட்சியின் சாம்பியன்கள் என்று பாராட்டப்பட்ட சகோதரர்கள் அன்மோல் ஜக்கி மற்றும் புனீத் ஜக்கி இருவரும் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். அவர்கள் தங்கள் நிறுவனத்துக்காக நிதி மோசடி மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

செபி (SEBI) வெளியிட்டுள்ள 20 பக்க அறிக்கையின்படி, ஜக்கி சகோதரர்கள் வணிக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தனிப்பட்ட ஆதாயங்களுக்குப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பான IREDA இலிருந்து பெறப்பட்ட ரூ.71.39 கோடி கடனை மடைமாற்றியுள்ளனர். இந்த நிதி தொடர்புடைய நிறுவனங்களில் பல பரிவர்த்தனைகள் மூலம் திரும்பிவிடப்பட்டு, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு, வெளிநாட்டுப் பணம், கோல்ஃப் கிளப்புகள், நகைகள் போன்ற ஆடம்பர செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பணம் தனிப்பட்ட செல்வமாகக் கருதப்பட்டு, கோடிக்கணக்கில் குடும்ப உறுப்பினர்களுக்குச் செலுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு தெளிவான ஆதாரங்களை SEBI கண்டுபிடித்துள்ளது.

24
SEBI on Gensol-BluSmart

செபி (SEBI) ஆய்வு:

இந்த முறைகேடு தனிப்பட்ட ஆதாயங்களுக்கு அப்பாலும் நீள்கிறது. ஜென்சோல் 30,000 மின்சார வாகன ஆர்டர்களைப் பெற்றதாக பகிரங்கமாகக் கூறியது. இதன் விளைவாக ஜென்சோல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்து, பங்கு விலை அதிகரித்தது. இருப்பினும், இவை உண்மையான ஆர்டர்கள் அல்ல என்று SEBI கண்டறிந்திருக்கிறது. நிறுவனத்தின் புனே ஆலையை ஆய்வு செய்தபோது உற்பத்தி குறைந்தபட்ச அளவிலேயே நடப்பது தெரியவந்தது. இது நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான பெரிய வேறுபாட்டை அம்பலப்படுத்தியது.

ஜக்கி சகோதரர்கள் பலமுறை ஊடக வெளிச்சம் பெற்று, வெகுவாகக் கொண்டாடப்பட்டனர், முக்கிய வணிகக் குழுக்களில் இடம்பெற்றனர். 40 வயதுக்குட்பட்ட செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தனர். அவர்கள் கூறியவற்றை சரிபார்க்க பெரிதாக எந்த முயற்சியும் எடுக்காமல், ஊடகங்கள் இருவருக்கும் புகழாரம் சூட்டின. கடினமான கேள்விகள் எதையும் கேட்காமல் அவர்களை வெற்றியின் முகங்களாக மட்டும் காட்டி வந்தன. இந்நிலையில் செபி மூலம் வெளிப்பட்டிருக்கும் ஊழல் ஸ்டார்ட்அப் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தங்கப் பத்திரங்களை விற்க சரியான நேரம்! எவ்வளவு லாபம் கிடைக்கும்?

34
IREDA மற்றும் PFC

போலி ஆவணங்கள்:

ஜென்சோல் கடன் நிறுவனங்களுக்கு போலி கடிதங்களை வழங்கியதாகவும், சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தியதாகப் பொய்யான ஆவணங்களைக் காட்டியதாகவும் தெரியவந்தது. அந்த ஆவணங்கள் IREDA மற்றும் PFC மூலம் வழங்கப்படவில்லை என்பதையும் செபி உறுதிப்படுத்தியது.

கடன் தொடர்பான தவறுகளை மறைக்க IREDA மற்றும் PFC நிறுவனங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் தெரியவந்துள்ளது. ஜூன் 2024 இல் எழுந்த புகாரைத் தொடர்ந்து செபி இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கியது. கடன் மதிப்பீட்டு நிறுவனங்களான CARE மற்றும் ICRA ஆகியவை ஜென்சோலின் மதிப்பீட்டை "D" கிரேடுக்குக் குறைத்தன.

44
BluSmart

IREDA கடன் மோசடி:

நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக அளிக்கப்பட்ட கடன் உண்டியலில் போட்ட காசு போல எந்த வளர்ச்சியும் அடையவில்லை. நிறுவனத்தின் மேம்பாட்டுப் பணிகள் எதற்கும் பயன்படுத்தப்படவில்லை என SEBI கூறியுள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்பு மிகப்பெரியது. IREDA மூன்று ஆண்டுகளில் ஜென்சோல் நிறுவனத்துக்கு ரூ.977 கோடி கடன் வழங்கியது. அதில் ரூ.664 கோடி மின்சார வாகன கொள்முதல்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பணத்தைக் கொண்டு 6,400 வாகனங்களை வாங்குவதாக முன்மொழிந்திருந்த நிலையில், 4,704 வாகனங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. ரூ.567.73 கோடிக்கு மட்டுமே வாகனங்கள் வாங்கப்பட்டதாகவும், ரூ.262.13 கோடி கணக்கில் வராமல் போனதாகவும் செபியின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த வழக்கு இந்தியாவின் ஸ்டார்ட்அப் துறைக்கு ஒரு திருப்புமுனையாக உள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிக பொறுப்புணர்வுடன் நெறிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. பொதுமக்ககள் மற்றும் முதலீட்டாளர்களிடம் நம்பத்தன்மையைத் தக்கவைக்க நிறுவனத்தில் வெளிப்படைத்தன்மை, விதிமுறைகளுக்கு இணக்கமாக நடப்பது, கடன் சார்ந்த பொறுப்புகளை சரியாக நிர்வகிப்பது ஆகியவை அவசியம் என்பதை உணர்த்துகிறது.

வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புவது எதற்காக?

Read more Photos on
click me!

Recommended Stories