தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64,000ஐத் தாண்டி சாதனை படைத்த நிலையில், சந்தை நிலவரம் மற்றும் உலகப் பொருளாதார நிலை காரணமாக விரைவில் ரூ.70,000ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தங்கம் விலை சிறிது குறைந்தாலும், நீண்டகால அடிப்படையில் விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
மீண்டும் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! அதிகரித்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.?
சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான ஏற்றம் மற்றும் இறக்கம் உள்ளிட்டவற்றை பொறுத்து தினமும் தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் ஆண்டாக உள்ளது. அதன் பணி இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை பிப்.5-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.63,000 என்ற விலையைத் தாண்டியது.
25
இந்த விலை உயர்வால் தங்கம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகியாக மாறிவிட்டது. அந்த வகையில் நேற்று முன் தினம் ஒரு சவரன் 64ஆயிரத்தை கடந்தது. இதற்கு காரணமாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
35
gold rate
மேலும் அமெரிக்க அதிபரின் டொனால்ட் ட்ரம்பின் அடுத்தடுத்த புதிய,புதிய அறிவிப்புகளால் முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் பொருளாதார முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்கும் நிலை உ,ருவாகியுள்ளது. இதனால் தங்கத்தின் மீது தங்களது முதலீட்டு பார்வையை திருப்பியுள்ளனர். எனவே வரும் நாட்களில் ஈசியாக ஒரு சவரன் 70ஆயிரம் ரூபாயை கடந்து விடும் என கணித்துள்ளனர்.
45
gold rate
தங்கத்தின் விலையானது நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சரிவை சந்தித்தது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 7940 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 63ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை குறைந்தது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
55
gold rate
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து 7980 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து 63,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்திருப்பது நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.