Published : Dec 13, 2024, 11:54 AM ISTUpdated : Dec 13, 2024, 12:42 PM IST
Gold Rate in Tamilnadu :தமிழ்நாட்டில் தங்கத்தின் மீதான மோகம் அதிகம். நேற்று மாறாமல் இருந்த தங்க விலை இன்று குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
25
Gold rate in chennai
அந்த வகையில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் தங்க நகைக்கடைகளில் கூட்டம் எந்நேரமும் அலைமோதுகிறது. இதற்கு முக்கிய காரணம் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே தற்போதே தங்கத்தை வாங்கி வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற அடிப்படையில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். மேலும் அவரச தேவை என்றால் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தங்க நகையை அடகு கடைகளில் வைக்கவும் உதவுகிறது.
35
Yesterday Gold Rate
இந்நிலையில் டிசம்பர் மாதம் தொடக்கம் முதல் தங்கத்தின் விலையானது ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.58,280-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.7,285-க்கு விற்பனையானது.
45
Today Gold Rate
இன்றைய (டிசம்பர் 13) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,887-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.63,096-ஆக விற்பனையாகிறது.
55
Today Silver Rate
வெள்ளி விலை மூன்று ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி ரூ.101.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.