சமீபத்திய தங்கம் விலை சரிவுக்குப் பிறகு, நீண்ட காலத்திற்கு விலை ஏற்றம் காணும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதற்கு முன் நிதி நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
தங்கம் என்றாலே மக்களுக்கு ஒரு ஆசை இன்றளவும் இருந்து வருகிறது. குறிப்பாக தங்கம் மீது பெண்களுக்கு உள்ள மோகம் பற்றி சொல்லவே தேவையில்லை. சமீபத்தில் தங்கம் விலையில் சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட இந்த விலை மாற்றம் முதலீட்டாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலத்திற்கு தங்கம் ஏற்றம் காணும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பான முதலீடு
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைத்ததால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இது குறுகிய கால விலை உயர்வை கட்டுப்படுத்தியுள்ளது. உலக மத்திய வங்கிகள் 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 220 டன் தங்கம் வாங்கியுள்ளன. இது உலகளாவிய நிச்சயமற்ற நிலையில் தங்கத்தின் பாதுகாப்பான முதலீட்டு மதிப்பைக் காட்டுகிறது.
22
வெள்ளி விலை அதிகரிக்குமா?
எலக்ட்ரிக் வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் தூய்மை எரிசக்தி துறைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு வெள்ளியின் விலை தங்கத்தை விட அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் வெள்ளி என்பது முதலீட்டுக்கு உகந்தது இல்லை என்று நிதி ஆலோசகர்கள் கூறுவார்கள். தற்போது அந்த கருத்து ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது.
இந்தியாவில் கோல்டு இடிஎஃப் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. நீண்ட கால முதலீட்டிற்கு இடிஎஃப்-கள் ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான தேர்வாகக் கருதப்படுகிறது. எனவே தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடு செய்வபவர்கள் நிதி நிபுணர்களின் ஆலோசனையை பெற்று முதலீடு செய்வது அவசியம்.