தங்கத்தின் விலை சமீபத்தில் சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது. இந்த விலை சரிவு நகை வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கு எவ்வளவு அதிகரித்தது தெரியுமா.?
தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகளவு உள்ளது. அந்த வகையில் தங்க நகைகளை தங்களின் மதிப்பை கூட்டிக்காட்டுவதற்காக திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் அணிய விரும்புவார்கள். இதன் காரணமாக எப்போதும் நகைக்கடைகளில் உயர்வகுப்பு மக்களின் கூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் தான் தங்கத்தின் விலை கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சவரனுக்கு 10ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
25
வர்த்தக போர்- வரி விதிப்பு
டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு மீதான வரி விதிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருந்தது. அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களின் மனநிலை மாறி, தங்கத்தில் முதலீடு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
35
ஏறி இறங்கும் தங்கத்தின் விலை
2025ஆம் ஆண்டு தொடக்கமே நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிப்ரவரி மாதம் அதை விட ஷாக் கொடுத்தது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.63,000ஐ தாண்டி 64ஆயிரத்தை தொட்டது. இதனால் நடுத்தர வர்க்க நகைப்பிரியர்கள் என்ன செய்வது என குழம்பிய நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் இரண்டு முறை தங்கத்தின் விலை குறைந்தது.
தங்கம் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. தங்கம் வாங்க விரும்புவோர் இப்போதே வாங்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
45
நகைப்பிரியர்களுக்கு ஷாக்
அந்த வகையில் கடந்த 15ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-ஆக விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,890-க்கு விற்பனையானது. நேற்று தங்க சந்தை விடுமுறை காரணமாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. பழைய விலையில் விற்பனை செய்யப்பட்டது.
55
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
இன்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலை அதிகரித்துளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயரந்து 7940 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.