கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரே நாளில் ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்வா.?

First Published | Dec 3, 2024, 9:45 AM IST

தங்கத்தின் விலை சர்வதேச சந்தை மற்றும் பல்வேறு காரணிகளால் மாறுபடுகிறது. சமீபத்தில் தங்கம் விலை உச்சத்தைத் தொட்ட நிலையில், மக்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்கியுள்ளனர். இந்தநிலையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

gold rate

ஏறி இறங்கும் தங்கம் விலை

சர்வதேச சந்தை நிலவரபடி தங்கத்தின் விலையானது தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரு சவரன் தங்கம் தீபாவளியன்று (அக்டோபர் 31ம் தேதி)  ரூ59,640க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது பல மடங்கு அதிகரிக்கப்போவதாக எச்சரிக்கை செய்யப்பட்டது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை தொட்டு விடும் என கூறப்பட்டது.

gold rate

தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள்

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில் அமெரிக்க தேர்தல் முடிவுகள் காரணமாக தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைய தொடங்கியது. கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு 4120 ரூபாய் அளவிற்கு குறைந்தது. இது தான் நல்ல வாய்ப்பு என நடுத்தர வர்க்க மக்கள் முதல் உயர் வகுப்பு மக்கள் வரை தங்கத்தை வாங்கி குவித்தனர். பணத்தை கடன் வாங்கியாவது எதிர்கால சேமிப்பிற்காக தங்கத்தில் முதலீடு செய்தனர். பல நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலை மோதியது.

Tap to resize

gold rate

மீண்டும் அதிகரிக்கும் தங்கம் விலை

ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்தது. இந்த விலை உயர்வால் நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு தங்கத்தை வாங்க முடியாத நிலை உருவாகுமோ அச்சப்பட்டுள்ளனர்.  இந்திய மக்களே தங்கத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டுள்ளனர். இந்தநிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது பல மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

gold rate

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

முக்கியமாக உலகப் பொருளாதார நிலை, டாலர் மதிப்பு , அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித எதிர்ப்பார்ப்பு, ஆகியவற்றின் ஒழுங்கற்ற  தன்மை காரணமாக தங்கம் விலை மாறி, மாறி வருவதாக கூறப்படுகிறது.இருந்த போதும் தங்கத்தின் மீது முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் விலையானது உயர்ந்தாலும் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். 

gold rate

தங்கத்தின் விலை நிலவரம்

இந்நிலையில் கடந்த 29ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 57,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த நவம்பர் 30ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 57200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனையடுத்து நேற்று கிராம் ஒன்றுக்கு  60 ரூபாய் குறைந்து 7,090 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 56,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
 

Gold rate

இன்றைய தங்கம் விலை என்ன.?

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து 7ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் அதாவது ஒரு சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன் படி 57ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Latest Videos

click me!