போலி பான் கார்டுக்கு அபராதம் ரூ.10,000! பின்விளைவு இன்னும் மோசமா இருக்கும்!

First Published | Dec 2, 2024, 3:08 PM IST

உங்களிடம் டூப்ளிகேட் பான் இருந்தால், வருமான வரிச் சட்டத்தின் 272B பிரிவின் கீழ் வருமான வரித்துறை ரூ.10,000 வரை அபராதம் விதிக்கலாம். அபராதத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

PAN Card

வருமான வரித்துறையின் பான் 2.0 (PAN 2.0) திட்டத்திற்கு அரசாங்கம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இது PAN மற்றும் TAN கார்டுகளை வழங்குதல் மற்றும் நிர்வாகத்தை நவீன முறையில் சீராக்க முயல்கிறது.

PAN Card

தற்போதுள்ள 78 கோடி பான் கார்டுகள் மற்றும் 73.28 லட்சம் டான் கார்டுகளின் தரவுத்தளத்தை கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோரின் தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த முயற்சியை வருமான வரித்துறை முன்னெடுக்கிறது.

Latest Videos


PAN Card

தற்போது, பான் கார்டு (PAN card) தொடர்பான சேவைகள் மூன்று தளங்களில் பிரிந்துள்ளன. இ-ஃபைலிங் போர்டல் (e-Filing Portal), யுடிஐஐடிஎஸ்எல் போர்டல் (UTIITSL Portal) மற்றும் புரோட்டீன் இ-கோவ் போர்டல் (Protean e-Gov Portal) என 3 தளங்கள் உள்ளன. PAN 2.0 திட்டத்தில் இந்த சேவைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தளம் உருவாக்கப்படும். அதன் மூலம் பயன்பாடு, புதுப்பிப்பு, திருத்தம், ஆதார்-பான் இணைப்பு, ஆன்லைன் சரிபார்ப்பு போன்ற போன்ற பல செயல்முறைகள் எளிமையாகும்.

PAN Card

புதிய ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை தாமதங்களைத் தவிர்க்கவும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிமுறைகளை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. PAN மற்றும் TAN கார்டு வழங்குதல் மற்றும் நிர்வாகத்தை மேலும் திறமையாகக் கையாளவும் புதிய திட்டம் வழிவகை செய்யும்.

PAN Card

PAN 2.0 திட்டம் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் முக்கியமான முன்னெடுப்பாக இருக்கும். இத்திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும், காகிதப் பயன்பாடு இல்லாத செயல்பாடுகளை வலியுறுத்துகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் பான் பான் கார்டு குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில் உள்ள டிஜிட்டல் அமைப்புகளுக்கான பொது அடையாளமாகவும் செயல்படும்.

PAN Card

வருமான வரிச் சட்டம், 1961இன் விதிகளின்படி, எந்த நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் வைத்திருக்க முடியாது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருந்தால், அவர் அதை அதிகார வரம்பிற்குட்பட்ட மதிப்பீட்டு அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வந்து கூடுதல் பான் எண்ணை நீக்கி / முடக்கச் செய்ய வேண்டும்.

PAN Card

PAN 2.0 இல், போலி பான் கார்டுகளை அடையாளம் காண்பதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பது குறையும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

PAN Card

உங்களிடம் டூப்ளிகேட் பான் இருந்தால், வருமான வரிச் சட்டத்தின் 272B பிரிவின் கீழ் வருமான வரித்துறை ரூ.10,000 வரை அபராதம் விதிக்கலாம். அபராதம் செலுத்துவதில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, NSDL அல்லது UTIITSL போன்ற பான் கார்டு (PAN  card) சேவை வழங்குநர்களிடம் டூப்ளிகேட் பான் கார்டைச் சமர்ப்பிக்க வேண்டும். தேவையான படிவங்களைப் பூர்த்தி செய்து போலி பான் கார்டுகளை தாக்கல் செய்யலாம்.

PAN Card

ஆனால் டூப்ளிகேட் பான் கார்டை ஒப்படைப்பற்கு முன்பாக, உங்களிடம் உள்ள செல்லுபடியாகும் பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைத்து, வங்கிக் கணக்குகள், முதலீடுகள் மற்றும் வரித் தாக்கல்கள் உட்பட அனைத்து நிதிப் பதிவுகளிலும் அப்டேட் செய்துகொள்வது முக்கியம்.

click me!