ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.! இன்று ஒரு கிராமுக்கே இவ்வளவு உயர்வா.? ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?

Published : Dec 10, 2024, 09:53 AM ISTUpdated : Dec 10, 2024, 09:57 AM IST

தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதுகிறது. குறிப்பாக இந்திய மக்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வதால், இந்தியா டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவிக்கும் நாடாக உள்ளது.

PREV
14
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.! இன்று ஒரு கிராமுக்கே இவ்வளவு உயர்வா.? ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
Gold rate

தங்கத்தை வாங்கி குவிக்கும் மக்கள்

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் விலை ஏறினாலும் இறங்கினாலும் தங்க நகைக்கடைகளில் மக்களிட் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக மற்ற நாடுகளை விட இந்திய மக்களே அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.

அதன் படி திருமண நிகழ்வுகள், பண்டிகை காலங்கள், நண்பர்களுக்கு பரிசளிக்க என தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள், மேலும் தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய பெண்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவிக்கும் நாடாக இந்தியா உள்ளது.
 

24
Gold News

இந்திய மக்களிடம் இவ்வளவு தங்கமா.?

அந்த வகையில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகளிலும் தற்போது தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அதன் படி தங்கத்தை எந்த நாடு அதிகளவு இருப்பு வைத்துள்ளது என்ற தகவலை உலக தங்க கவுன்சில் பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதன் படி அமெரிக்காவானது  8133 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது. அடுத்தாக ரஷ்யாவில் 2335 டன் தங்கம் இருப்பு உள்ளது. இந்தியா 840 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. அதே நேரத்தில் இந்திய மக்களிடம் இருக்கும் தங்கம் இருப்பு என்று பார்க்கும் போது 25ஆயிரத்து 537 டன் தங்கத்தை கையிருப்பு வைத்திருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
Gold rate

உச்சத்தை தொட காத்திருக்கும் தங்கம் விலை

இதன் மதிப்பு மட்டும் 200 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிட செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பட்டியல் மூலம் இந்திய மக்கள் எந்தளவு தங்கத்தின் மீதான அர்வத்தோடு உள்ளனர் என்பது தெரியவருகிறது. இந்த நிலையில் நாள் தோறும் அதிகரிக்கும் தங்கம் விலையானது தற்போது உச்சத்தை நோக்கி சென்றுள்ளது.

இன்னும் ஒரு சில வருடங்களில் ஒரு சவரன் 1லட்சம் முதல் 1அரை லட்சத்தை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதன் படி தங்கத்தின் விலையானது ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாயை எட்டும் நிலையில் உள்ளது. 

44
Gold Rate Today

இன்றைய தங்கம் விலை என்ன.?

நேற்று வாரத்தின் முதல் நாளில் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்திருந்தது. அதன் படி தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து 7130 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 57,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் அதிகரித்து 7ஆயிரத்து 205 ரூபாயாகவும், சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு 57ஆயிரத்து 540 ரூபாய்க்கு வி்ற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


 

Read more Photos on
click me!

Recommended Stories