வியூஸ் அள்ளும் வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்! எவ்வளவு சம்பாதிக்கிறாங்க தெரியுமா?

Published : Dec 09, 2024, 09:52 PM IST

Village Cooking Channel Net Worth: 2.7 கோடி பாலோவர்களைக் கொண்ட வில்லேஜ் குக்கிங் சேனல், மாதம் வெறும் 4 வீடியோக்கள் மட்டுமே வெளியிட்டாலும் மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெறுகிறது. யூடியூப் மற்றும் பிற சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த சேனல் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது என்று தெரியுமா?

PREV
16
வியூஸ் அள்ளும் வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்! எவ்வளவு சம்பாதிக்கிறாங்க தெரியுமா?
Village Cooking Channel YouTube Videos

பிரபலமான சமையல் யூடியூப் சேனல்களில் ஒன்று வில்லேஜ் குக்கிங் சேனல். கிட்டத்தட்ட 2.7 கோடி ஃபாலோயர்களைக் கொண்டிருக்கும் மாதத்துக்கு 4 வீடியோ மட்டும் வெளியிடுகிறது. ஆனால், ஒவ்வொரு வீடியோவுக்கும் மில்லியன் கணக்கில் வீயூஸ் வருகிறது. அப்படியானால் இந்தச் சேனல் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது என்று தெரியுமா?

26
Village Cooking Channel Team

வில்லேஜ் குக்கிங் சேனல் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. சமையல் வீடியோக்களை பதிவிட்டு வரும் இந்த சேனல் உலக முழுவதும் பிரபலமாகியுள்ளது. சமைக்கும் உணவை அதிக அளவு சமைத்து ஆதரவற்றவர்களுக்கும் முதியோருக்கும் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஒரு கோடி ஃபாலோயர்களைத் தாண்டிய முதல் யூடியூப் சேனல் என்ற சாதனையைப் படைத்தது. இதற்காக யூடியூப் சார்பில் வில்லேஜ் குக்கிங் குழுவினருக்கு டைமண்ட் பட்டன் வழங்கப்பட்டது.

36
Village Cooking Channel Periyathambi

புதுக்கோட்டையில் சின்ன வீரமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த குழுவினர்தான் இந்தச் சேனலை நடத்துகிறார்கள். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு சமையலில் விற்பன்னரான பெரிய தம்பி தாத்தா தலைமை தாங்குகிறார். சுப்பிரமணியம், தமிழ்செல்வன், முருகேசன், முத்துமாணிக்கம், அய்யனார் ஆகிய இளைஞர்களும் சேர்ந்து உணவு சமைக்கிறார்கள்.

46
Village Cooking Channel Earnings

வில்லேஜ் குக்கிங் சேனலில் இதுவரை 200 க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியாகியுள்ளன. இதுவரை 767 கோடிக்கும் மேலான பார்வைகளைத் தாண்டி வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சேனலில் பதிவாகும் ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 1000 பார்வைகளுக்கு 50 ரூபாய் வீதம் வருமானம் கிடைக்கிறது.

56
Village Cooking Channel Income

இதுவரை வந்துள்ள 767 கோடி வியூஸ் அடிப்படையில் கணக்கிட்டால் 38.35 கோடி ரூபாய் யூடியூபில் இருந்து சம்பாதித்து இருக்கிறார்கள் என்று கணிக்கலாம். யூடியூபர்கள் தரவுகளை வழங்கும் ஒரு தளத்தின் தகவல்பனடி, வில்லேஜ் குக்கிங் சேனலின் நிகர மதிப்பு குறைந்தது 2.88 மில்லியன் டாலர் என்று தெரிகிறது. அதாவது, இந்திய மதிப்பில் 24,30,93,773  ரூபாய்.

 

66
Village Cooking Channel Net Worth

சில வருடங்களுக்கு முன்பு, யூடியூப் வீடியோக்கள் மூலம் வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு ரூ.10 லட்சம் மாத வருமானம் கிடைக்கிறது என்றும் தகவல் பரவியது. யூடியூப் தவிர பேஸ்முக் போன்ற மற்ற சமூக வலைத்தளங்களில் இருந்து ரூ.2 லட்சம் மாதம்தோறும் வருகிறது என்று சொல்லப்பட்டது. அப்போது 1.3 கோடியாக இருந்த ஃபாலோயர்கள் எண்ணிக்கை இப்போது டபுள் ஆகிவிட்டது. அதே அளவுக்கு வருமானமும் கூடியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

click me!

Recommended Stories