சர்வதேச சந்தை மற்றும் பங்குச்சந்தை வீழ்ச்சியால் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், விரைவில் 80 ஆயிரத்தை எட்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பிரேக்கே இல்லாமல் உயரும் தங்கம் விலை.! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
தங்கம் விலையானது சர்வதேச மார்க்கெட் விலை நிலவரப்படி தினமும் ஏறி இறங்கி வருகிறது. இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் எதிரொலிக்கிறது. இதனால் தங்கம் விலையானது வரலாறு காணாத புதிய, புதிய உச்சத்தை தினந்தோறும் சந்திக்கிறது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
24
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை
தங்கத்தின் விலை கடந்த டிசம்பர் இறுதியில் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுமார் 40 நாட்களில் ஒரு சவரன் 64ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த விலை உயர்வானது தற்போது டிரெய்லர் தான் எனவும் இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு சவரன் 80 ஆயிரத்தை கடந்து இந்த ஆண்டு இறுதிக்குள் 1 லட்சம் ரூபாயை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
34
நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி
இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டு பட்ஜெட் ஒதுக்கியவர்கள் பலரும் தங்கத்தின் மீதான உந்த விலை உயர்வு காரணமாக தங்கள் திட்டங்களை மாற்றி அமைத்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்கம் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க அதிபரின் அதிரடி முடிவால் வர்த்தக போர் உருவாகி வருகிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டை பல்வேறு நாடுகள் அதிகரித்துள்ளன. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
44
64ஆயிரத்தை கடந்த தங்கம் விலை
இந்த நிலையில் தான் இந்த வாரம் தொடக்கம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்தது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 8ஆயிரத்து 35 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 64,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 8,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 64560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.