Gold Rate today : எட்டாக் கனியாக மாறி வரும் தங்கம்! தொடர்ந்து உயரும் தங்கம் & வெள்ளி விலை!

Published : Mar 16, 2023, 10:20 AM IST

கடந்த வாரத்தில் இறங்கு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை இந்த வாரம் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. ஒரு பவுன் தங்கம் 43 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

PREV
14
Gold Rate today : எட்டாக் கனியாக மாறி வரும் தங்கம்! தொடர்ந்து உயரும் தங்கம் & வெள்ளி விலை!

ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்துதான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடுதான் முக்கிய காரணமாகும். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால் சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை முதலைகள் வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
 

24

கடந்த வாரங்களில் இறங்கு முகத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக உயரத் தொடங்கியுள்ளது. அதன் படி இன்று சென்னையில் ஒருகிராம் ஆபரன தங்கத்தின் விலை (22 கேரட்) நேற்றை விலையை விட ரூ.45 அதிகரித்து ரூ.5,425 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
 

34

22 கேரட் - ஆபரனத் தங்கம்

ஒரு கிராம் - ரூ.5,425
8 கிராம் - ரூ.43,400

இதேபோல், தூய தங்கத்தின் விலை (24 கேரட்) ஒரு கிராம் ரூ. 49 அதிகரித்து ரூ.5,918 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் - தூய தங்கம்

ஒரு கிராம் - ரூ.5918
8 கிராம் - ரூ.47,344

இந்த விலை, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கும் பொருந்தும்.

WPI Inflation: பிப்ரவரியில் மொத்த விலை பணவீக்கம் 3.85 சதவீதமாகச் சரிந்தது

44

வெள்ளி விலை நிலவரம்

மேலும், வெள்ளி விலையும் கடந்த ஒரு வாரமாக மளமளவென உயர்ந்து வருகிறது. 10 கிராம் வெள்ளி நேற்றைய விலையிலிருந்து ரூ.2 அதிகரித்து ரூ.727ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

ஒரு கிராம் - ரூ.72.70
10 கிராம் - ரூ.727
ஒரு கிலோ - ரூ.72700

இவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

வருமான வரி இ சரிப்பார்ப்பு என்றால் என்ன? 35,000 வழக்குகளுக்கு இதுவரை தீர்வு!!
 

Read more Photos on
click me!

Recommended Stories