இன்னும் 3 நாள் தான் இருக்கு.. டோல் பிளாசாக்களில் 2 மடங்கு கட்டணம் அபராதம்.. நவம்பர் 15 முதல் புதிய விதி.!

Published : Nov 12, 2025, 09:06 AM IST

நவம்பர் 15 முதல் நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் விதிகளில் பெரிய மாற்றம் அமலுக்கு வரவுள்ளது. பாஸ்டேக் இல்லாமல் பணம் கொடுத்து டோல் கட்டுபவர்கள் இரட்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் பல மாற்றங்கள் வரவுள்ளது.

PREV
15
புதிய டோல் பிளாசா விதிகள்

நவம்பர் 15 முதல் நெடுஞ்சாலைகளில் புதிய டோல் விதிகள் அமலுக்கு வருகின்றன. இனி பாஸ்டேக் இல்லாமல் பணம் கொடுத்து டோல் கட்டுபவர்கள் இரட்டிப்பு தொகை செலுத்த வேண்டும். ஆனால், யுபிஐ மூலம் கட்டினால் வழக்கமான கட்டணத்தின் 1.25 மடங்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் நோக்கம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது, டோல் பிளாசாக்களில் பணப் பயன்பாடு குறைப்பது ஆகும்.

25
நவம்பர் 15 முதல் மாற்றங்கள்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2008-ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்து, புதிய கட்டண முறைமையை கூறியது. அதன்படி, ஒரு வாகனத்தின் பாஸ்டேக் செயல்படவில்லை என்றால், பணமாக கட்டினால் இரட்டிப்பு கட்டணம், ஆனால் யுபிஐ மூலம் கட்டினால் 1.25 மடங்கு மட்டும் கட்டணம் செலுத்தலாம். உதாரணமாக, பாஸ்டேக் மூலம் ரூ.100 ஆகும் டோல் கட்டணம், பணமாக கட்டினால் ரூ.200, யுபிஐ வழி கட்டினால் ரூ.125 ஆகும்.

35
பாஸ்டேக் ரூல்ஸ்

இந்த மாற்றம், டோல் வசூலில் வெளிப்படைத்தன்மையை உயர்த்தவும், நெடுஞ்சாலை பயணத்தை எளிதாக்கவும் அரசு எடுத்த முக்கியமான படியாக கருதப்படுகிறது. பாஸ்டேக் முறை ஏற்கனவே நாடு முழுவதும் பரவலாக செயல்படுகிறது. தற்போது, ​​98% வாகனங்கள் பாஸ்டேக் பயன்படுத்துகின்றன. இதனால் டோல் பிளாசாக்களில் காத்திருக்கும் நேரம் பெரிதும் குறைந்துள்ளது.

45
நெடுஞ்சாலை புதிய விதி

மேலும், அரசு சமீபத்தில் பாஸ்டேக் Annual Pass என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கார்கள், ஜீப்புகள், வேன்கள் போன்ற தனியார் வாகனங்களுக்கு பொருந்தும். ஆண்டிற்கு ரூ.3,000 செலுத்தி, ஒரு வருடம் அல்லது 200 டோல் கடப்புகளுக்கான பாசாக பெறலாம். இது 1,150க்கும் மேற்பட்ட டோல் பிளாசாக்களில் பயன்படுத்தக்கூடியது.

55
டோல் கட்டணம்

தற்போது, ​​இந்தியாவில் சுமார் 45,000 கிமீ நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் சுமார் 1,200 டோல் பிளாசாக்கள் செயல்படுகின்றன. NHAI சுமார் 70,000 கிமீ நெடுஞ்சாலைகளை பரமரித்து வருகிறது. புதிய விதிமுறைகள் டிஜிட்டல் இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக, பயணிகளுக்கு சிரமமின்றி, வேகமான பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories