Floating Rate Loan: இனி வங்கிகள் இஷ்டத்துக்கு வட்டியை மாத்த முடியாது? RBI-யின் புதிய ரூல்ஸ்!

Published : Aug 18, 2026, 04:16 PM IST

Floating Rate Loan: ஃப்ளோட்டிங் ரேட் கடன்களுக்கான வட்டி விகித மாற்றங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர இந்திய ரிசர்வ் வங்கி புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

PREV
12
ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு

ஃப்ளோட்டிங் ரேட்டில் வீட்டு கடன், தனிநபர் கடன் அல்லது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வாங்கியவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு கவனம் பெறப்படுகிறது. ‘இந்திய ரிசர்வ் வங்கியின் கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கான வட்டி விகித வழிகாட்டுதல்கள், 2026’ என்ற பெயரில் இந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது, கடனுக்கான வட்டி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதில் கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் கடன்களுடன் இணைக்கப்பட்டுள்ள பென்ச்மார்க்கை மாற்றும் போது கடன் வாங்கியவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

ஃப்ளோட்டிங் ரேட் கடனில் வட்டி விகிதம் ஒரு குறிப்பிட்ட பென்ச்மார்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த பென்ச்மார்க்கில் மாற்றம் ஏற்பட்டால், கடனுக்கான வட்டியும் மாறக்கூடும். இதன் காரணமாக மாத தவணை அதிகரிக்கலாம் அல்லது கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் நீடிக்கலாம். ஏற்கனவே தனிநபர் கடன்களுக்கு வட்டி மாற்றினால் மாத தவணை அல்லது கடன் காலத்தில் ஏற்படும் தாக்கத்தை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. புதிய வரைவு இந்த நடைமுறையை மேலும் தெளிவுபடுத்தும் வகையில் உள்ளது.

22
வட்டி விவரங்கள்

இந்த வரையில் கவனம் பெறும் முக்கிய பரிந்துரை, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கடனின் பென்ச்மார்க்கை வேறு பென்ச்மார்க்காக மாற்ற வேண்டிய சூழ்நிலையில், வாடிக்கையாளரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதாகும். மேலும், பென்ச்மார்க் மாற்றம் மட்டுமே காரணமாக வாடிக்கையாளரின் வட்டி விகிதத்தை பழைய விகிதத்தைவிட அதிகமாக உயர்த்தக் கூடாது என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளரிடம் தனியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய கடன்களுக்கான பென்ச்மார்க் மாற்றத்தை ஏப்ரல் 1, 2029க்குள் முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் கடன் வாங்குபவர்களின் மாத தவணை மற்றும் கடன் காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு ஃப்ளோட்டிங் ரேட் கடனின் இறுதி வட்டி, பென்ஸ்மார்க் மற்றும் அதற்கு மேல் வங்கி வசூலிக்கும் கூடுதல் வட்டி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எனவே கடன் வாங்கும் போது எந்த பென்ச்மார்க்குடன் கடன் இணைக்கப்பட்டுள்ளது, வட்டி காலத்திற்கு ஒருமுறை மாற்றப்படும், அடுத்த வட்டி மறுநிர்ணய தேதி எப்போது எப்போது என்பதை எவ்வளவு கவனமாக தெரிந்துகொள்வது முக்கியம். இத்தகவல்கள் தெளிவாக இருந்தால், எதிர்காலத்தில் தவணை உயர்ந்தால் அதன் காரணத்தை புரிந்துகொள்ள முடியும்.

மேலும், கடனுடன் இணைக்கப்பட்டுள்ள பென்ஸ்மார்க் எதிர்காலத்தில் நிறுத்தப்பட்டால், அதற்கு பதிலாக புதிய பென்ச்மார்க் தொடர்பான நடைமுறையும் கடன் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என வரைவு கூறுகிறது. இதன் மூலம் திடீரென ஏற்படும் மாற்றங்களால் கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படுவதை குறைக்க முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது, இவை தற்போது வரைவு விதிகள் மட்டுமே என்பதுதான். “இனி வங்கிகளால் ஃப்ளோட்டிங் ரேட் வட்டியை மாற்ற முடியாது” என்று இதை அர்த்தப்படுத்த முடியாது. இறுதி விதிகள் வெளியான பிறகே முழுமையான நடைமுறை தெளிவாகும். அதுவரை, ஏற்கனவே உள்ள கடனின் பென்ச்மார்க், வட்டி மாற்ற காலம் மற்றும் கடன் ஒப்பந்த நிபந்தனைகளை சரிபார்த்து வைத்திருப்பது கடன் வாங்கியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories