ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD) திட்டங்கள் பாதுகாப்பான வருமானம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்குகின்றன. பணவீக்கத்தை ஈடுகட்ட உதவும் FD-கள், முதலீட்டு போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்த உதவுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப கால அளவைத் தேர்வு செய்யலாம்.
வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD) அல்லது நிலையான வைப்பு திட்டங்கள், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான வருமானத்தை அளிக்கும் முக்கிய முதலீட்டு தேர்வாக உள்ளன. இருப்பினும், தற்போதைய பணவீக்க விகிதத்துடன் ஒப்பிடும் போது FD-இன் வருமானம் அதிகமாக இல்லாதாலும், இது ஒரு நபரின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்த உதவுகிறது. FD-களில் முதலீடு செய்யும் நபர்களுக்கு ஒரே விகிதத்தில் உறுதியான வருமானம் கிடைப்பது, மற்றும் தேவையான கால அவகாசத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பது போன்ற பலன்களால், FD-கள் மக்களிடையே பிரபலமானவை.
29
மாறுபடும் வங்கி வட்டி விகிதங்கள்
முன்னணி வங்கிகள் ஒவ்வொன்றும் தங்கள் FD வட்டி விகிதங்களை வெவ்வேறு விதமாக நிர்ணயிக்கின்றன. இது ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் போது மாற்றம் அடையும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகள் போன்ற உயர் ஆபத்துள்ள முதலீடுகளுடன் ஒப்பிடும்போது ஃபிக்ஸ்ட் டெபாசிட் குறைந்த லாபம் தரலாம். ஆனால், முதலீட்டு பாதுகாப்பு தேவைப்படும் நபர்களுக்கு FD ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.