அரசு ஊழியர்களின் மகள்கள் குடும்ப ஓய்வூதியம் பெற முடியாதா? மத்திய அரசு விளக்கம்

Published : Nov 06, 2024, 08:04 AM IST

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகள் பெயர் நீக்கப்பட்டது குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. பெயர் நீக்கம் பற்றிய விவரத்தை அளிக்க அலுவலக குறிப்பாணையை (OM) வெளியிட்டுள்ளது.

PREV
16
அரசு ஊழியர்களின் மகள்கள் குடும்ப ஓய்வூதியம் பெற முடியாதா? மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகள் பெயர் நீக்கப்பட்டது குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. பெயர் நீக்கம் பற்றிய விவரத்தை அளிக்க அலுவலக குறிப்பாணையை (OM) வெளியிட்டுள்ளது.

26
pension plan

ஒரு அரசு ஊழியர் அரசுப் பணியில் சேர்ந்தவுடன், அவர் குடும்பத்தின் விவரங்களை படிவம் 4 மூலம் அலுவலகத் தலைவரிடம் கொடுக்க வேண்டும். அந்தப் படிவத்தில் வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஊனமுற்ற உடன்பிறப்புகள் (குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக இருந்தாலும், இல்லை என்றாலும்) ஆகியோர் பற்றிய அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

36

மேலும், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன், ஓய்வூதியத் தாள்களுடன் மீண்டும் படிவம் 4 இல் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஓய்வூதிய விதிகள் உள்ளன என குறிப்பாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

46

ஓய்வுபெற்ற பிறகு குடும்ப உறுப்பினர் விவரங்களில் இருந்து மகள் பெயரை நீக்குவது தொடர்பாக விளக்கம் கோரி கடிதங்கள் வந்ததாக அலுவலக குறிப்பாணை தெரிவித்தது. ஓய்வூதியத்திற்கு தகுதி உடையவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

56

"பரிந்துரைக்கப்பட்ட முறையில் தகவல் தெரிவித்தால், ​​மகளும் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகக் கருதப்படுவார். எனவே குடும்ப உறுப்பினர் விவரங்களில் மகள் பெயர் சேர்க்கப்பட்டு இருக்கும். ஓய்வூதியத்திற்கான தகுதி ஓய்வூதியம் பெறுபவர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் இறப்புக்குப்பின் தற்போதைய விதிகளின்படி முடிவு செய்யப்படும்" எனவும் குறிப்பாணை விளக்குகிறது.

66

ஓய்வூதியம் பெறக்கூடிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் இறந்தால், கணவரை இழந்த விதவை / மனைவியை இழந்த கணவன் ஆகியோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம் பெற இறந்த நபரின் கணவனோ மனைவியோ இல்லாதபோது, அது குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories