Income Tax: வருமானம் குறைவாக இருந்தாலும் வருமான வரி படிவம் தாக்கல் செய்ய வேண்டும்! ஏன் தெரியுமா?

Published : Jul 01, 2025, 08:48 PM ISTUpdated : Jul 01, 2025, 09:14 PM IST

வருமான வரி வரம்புக்குள் இல்லாதவர்கள் கூட சில சூழ்நிலைகளில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். வருமானம் குறைவாக இருந்தாலும், ITR தாக்கல் செய்வதால் கடன் பெறுவது, விசா விண்ணப்பிப்பது போன்றவற்றிக்கு உதவியாக இருக்கும்.

PREV
17
வருமானம் வரம்புக்குள் இருந்தாலும் வரி செலுத்த வேண்டும்

வருமானம் வருவோர் அனைவரும் தங்களுடைய வருடாந்த வருமானத்தை அரசு முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும். இதை “Income Tax Return (ITR)” தாக்கல் செய்வது என்கிறோம். பலர் “நான் வரி வரம்புக்குள் தான் இருக்கிறேன்” என எண்ணி இதனை தவிர்க்கிறார்கள். ஆனால் சில சூழல்களில் வருமான வரி தாக்கல் அவசியமாக மாறுகிறது.

27
வருமான வரம்பை மீறுபவர்கள்
  • இந்திய வருமானவரி சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட வரம்பை மீறினால், ITR தாக்கல் கட்டாயமாகும்:
  • பொதுப்பிரிவு (60 வயதிற்கு கீழ்): வருடம் ₹2,50,000 மேல் வருமானம்
  • மூத்த குடிமக்கள் (60-80 வயது): ₹3,00,000 மேல் வருமானம்
  • மிக மூத்த குடிமக்கள் (80க்கு மேல்): ₹5,00,000 மேல் வருமானம்
  • புதிய வரி திட்டத்தில்: ₹3,00,000 மேல் (எல்லோருக்கும் பொதுவானது)
37
ITR தாக்கல் அவசியம்

TDS (Tax Deducted at Source) பிடிக்கப்பட்டவர்கள்

வங்கி வட்டி, FD, சம்பளம் போன்றவற்றில் TDS பிடிக்கப்பட்டிருந்தால், அந்த தொகையை திரும்ப பெற ITR தாக்கல் அவசியம்.

தொழில்/சுயதொழில் மேற்கொள்பவர்கள்

வணிகம், தொழில், சுயதொழில் (freelancing, consultancy) செய்யும் நபர்கள், எந்த அளவு வருமானம் இருந்தாலும் ITR தாக்க வேண்டும்.

47
இவர்களும் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும்

வெளிநாட்டு சொத்து அல்லது வங்கி கணக்கு இருப்பவர்கள்

அந்நிய நாடுகளில் சொத்துகள் வைத்திருப்பவர்கள் அல்லது அங்கே வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ITR தாக்க வேண்டும்.

1 கோடி ரூபாய்க்கு மேல் வங்கி பரிவர்த்தனை

ஒரு நபர் தனது சேமிப்பு அல்லது ஓவர்டிராஃப்ட் கணக்கில் ₹1 கோடி அல்லது அதற்கு மேல் பண பரிவர்த்தனை செய்திருந்தால், ITR தாக்க வேண்டும்.

வெளிநாட்டு பயணச் செலவுகள் ₹2 லட்சம் மேல்

ஒரு நபர் அல்லது அவரது சார்பில் யாராவது வெளிநாட்டு பயணத்திற்கு ₹2 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவழித்திருந்தால், ITR தாக்கல் அவசியம்.

மின்சாரம் செலவு ₹1 லட்சம் மேல்

ஒரு நபரின் வீட்டு மின்சாரம் செலவு வருடத்திற்கு ₹1 லட்சத்தைத் தாண்டினால், அவரும் ITR தாக்க வேண்டும்.

57
வருமானம் குறைந்தாலும் தாக்கல் செய்வது ஏன் நல்லது?
  • பல தரப்புகளில் ITR தாக்கல் முக்கிய ஆதாரமாக மாறுகிறது:
  • வங்கி கடன்கள் (Home Loan, Personal Loan, Business Loan) பெறுவதற்கு
  • விசா விண்ணப்பங்கள்
  • உயர்ந்த மதிப்பு முதலீடுகள் (பங்கு, நிலம், பண பரிவர்த்தனை)
  • சரியான வருமான சான்று (Income Proof)
  • TDS மீட்பு (Refund) பெற
67
சிறிய வருமானம்? நன்மை பெற ITR தாக்கலாம்
  • உங்கள் வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருந்தால், சட்டப்படி வரி தாக்கல் அவசியம் இல்லை. ஆனால் சில நிலைகளில் ITR தாக்கலால் நன்மை கிடைக்கும்:
  • வங்கியில் TDS பிடிக்கப்படாமல் Form 15G/H பயன்படுத்தலாம்
  • முதியோர், மாணவர்கள், மைனர்கள் முதலீட்டின் வருமானத்தை காட்டலாம்
  • வருங்கால கடன் சான்று அல்லது ITR history உருவாகும்
77
ITR தாக்கல் என்பது நிதி ஒழுங்குமுறை

ITR தாக்கல் என்பது ஒரே வரி கட்டுவது மட்டுமல்ல, ஒரு நபரின் நிதி ஒழுங்குமுறை மற்றும் சமூக நம்பகத் தன்மை எனப்படும். வருமான வரம்பை மீறினால் அவசியம் தாக்க வேண்டும். தவிர, உங்கள் பண பரிவர்த்தனைகள், விசா தேவைகள், கடன் தேவைகள் ஆகியவற்றில் இது பெரிய ஆதாரமாக இருக்கிறது. சின்ன வருமானம் இருந்தாலும் வருமான வரி படிவம் தாக்கல் செய்யுங்கள் .நன்மை தான், தீமை எதுவும் இல்லை!

Read more Photos on
click me!

Recommended Stories