UAN ஆக்டிவாக இருக்க வேண்டும்: உங்கள் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (UAN) ஆக்டிவாக இருப்பது கட்டாயம்.
KYC முடிந்திருக்க வேண்டும்: உங்கள் கணக்குடன் ஆதார், பான் (PAN) மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மொபைல் எண் இணைப்பு: OTP வெரிஃபிகேஷனுக்காக உங்கள் மொபைல் எண், ஆதார் மற்றும் UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
முன்பை விட சூப்பர்ஃபாஸ்ட் EPFO
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின்படி, EPFO கடந்த 2025-26 நிதியாண்டில் 8.31 கோடி கிளைம்களை செட்டில் செய்துள்ளது. இதில் சுமார் 71% அட்வான்ஸ் கிளைம்கள் வெறும் 3 நாட்களில் ஆட்டோ-மோடில் முடிக்கப்பட்டன. செக் புக் போட்டோ அப்லோடு செய்வது, நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பது போன்ற சிக்கல்கள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன.