100 Percent PF Withdrawal: பிஎப் பணத்தை முழுமையாக எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு இபிஎப்ஓ புதிய பதிலை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்தால், உறுப்பினர்கள் இனி சிக்கலின்றி 100% பிஎப் தொகையை பெறலாம்.
ஊழியர்களுக்கு முக்கியமான நிதி பாதுகாப்பு கருவியாக இருக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) தொடர்பாக, இபிஎப்ஓ முக்கிய மாற்றத்தை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சிறப்பு சூழ்நிலைகளில், பிஎப் கணக்கில் உள்ள முழு தொகையையும் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தேவையற்ற ஆவணங்கள் மற்றும் காரண விளக்கங்களால் ஏற்படும் கிளைம் நிராகரிப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25
இனி காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை
முன்னதாக, 100% பிஎப் தொகையை பெற உறுப்பினர்கள் தகுந்த காரணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சில நேரங்களில் அதற்கான ஆதார ஆவணங்களும் கோரப்பட்டன. தகுதியற்ற காரணங்களால் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தற்போது, சிறப்பு சூழ்நிலை பிரிவின் கீழ் தகுதியுடையவர்கள் காரணத்தை விரிவாக விளக்காமல் விண்ணப்பிக்க முடியும்.
15 நாட்களுக்கு மேல் நிறுவனம் மூடப்பட்டிருப்பது, ஊதியம் இன்றி வேலை இழப்பு, வேலைநிறுத்தம் அல்லாத காரணங்களால் இரண்டு மாத சம்பளம் கிடைக்காத நிலை போன்றவை இதில் அடங்கும். மேலும், பணி நீக்கம், ஆட்குறைப்பு நடவடிக்கை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பணிநீக்க விவகாரங்களும் இந்த விதிகளின் கீழ் வரலாம். கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குடும்ப மருத்துவச் செலவுகளுக்கான சில சூழ்நிலைகளிலும் சலுகைகள் பொருந்தக்கூடும்.
சாதாரண சூழ்நிலைகளில், Eபிஎப் கணக்கில் உள்ள தொகையில் அதிகபட்சம் 75 சதவீதம் வரை மட்டுமே உறுப்பினர்கள் பெற முடியும். ஆனால், இபிஎப்ஓ வரையறுத்துள்ள சிறப்பு சூழ்நிலைகளில் 100 சதவீத தொகையையும் பெற அனுமதி வழங்கப்படும். இதற்கான தகுதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
55
ஊழியர்களுக்கு ஏன் இது முக்கியம்?
வேலை இழப்பு, சம்பள தாமதம் அல்லது திடீர் மருத்துவச் செலவுகள் போன்ற நெருக்கடி நேரங்களில், சேமித்து வைத்திருந்த பிஎப் தொகையை விரைவாகப் பயன்படுத்த இந்த மாற்றம் உதவும். ஊழியர்களின் நிதி சுதந்திரத்தை மேம்படுத்தும் இந்த நடவடிக்கை, இபிஎப்ஓவின் உறுப்பினர் நட்பு சீர்திருத்தங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.