PF பணத்தை மொத்தமா எடுக்க வேண்டாம்..! மாதந்தோறும் கைக்கு வரும் பணம்.. EPFO-வின் புதிய அதிரடி திட்டம்!

Published : Nov 19, 2026, 10:11 PM IST

ஓய்வுக்குப் பிறகு PF பணத்தை மொத்தமாக எடுக்க வேண்டிய அவசியமில்லை! இனி மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் புதிய SWP வசதிக்கு EPFO ஒப்புதல் அளித்துள்ளது.

PREV
15
PF பணம் மாதந்தோறும்

ஓய்வுக்குப் பிறகு பிஎஃப் பணத்தை மொத்தமாக எடுக்க வேண்டிய அவசியமில்லை. இனி மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணையாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் புதிய வசதிக்கு EPFO ஒப்புதல் அளித்துள்ளது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (EPFO), ஓய்வுபெற்றவர்கள் தங்களது பிஎஃப் (PF) சேமிப்புப் பணத்தை ஒரே நேரத்தில் முழுமையாக எடுக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணைகளாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு 'Systematic Withdrawal Plan' (SWP) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற EPF மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) 240-வது கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

25
மாதந்தோறும் PF பணத்தை எடுக்கலாம்!

இந்த புதிய வசதியின்படி, தகுதியுள்ள ஓய்வுபெற்ற உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை மாதந்தோறும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை எனத் தவணை முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வசதி முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது. அதாவது, உறுப்பினர்கள் கட்டாயம் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டிய அவசியமில்லை. வழக்கம்போல் தங்களது பிஎஃப் பணத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் வாய்ப்பு இருக்கும்.

35
PF கணக்கில் இருக்கும் மீதித் தொகைக்கும் வட்டி கிடைக்கும்!

இந்தத் திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், பிஎஃப் கணக்கில் உள்ள முழுப் பணத்தையும் எடுத்துவிட வேண்டியதில்லை. தேவையான தொகையை மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக்கொள்ளலாம்.

கணக்கில் மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி கிடைக்கும். இதன் மூலம் ஓய்வுக்கால சேமிப்பைத் தொடர்ந்து முதலீட்டில் வைத்திருப்பதுடன், அவ்வப்போது பணத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், உறுப்பினர்கள் விரும்பும் நேரத்தில் இந்த வசதியை நிறுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படும். அதுமட்டுமின்றி, பிஎஃப் கணக்கில் உள்ள அசல் தொகையை எடுக்காமல், அதன்மூலம் கிடைக்கும் வட்டியை மட்டும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கும்.

45
55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை!

முதற்கட்டமாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்தப் புதிய வசதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தை உருவாக்குவதுடன், ஓய்வூதியப் பலன்களுக்கு கூடுதல் வருமான ஆதாரமாக பிஎஃப் சேமிப்பையும் பயன்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகளுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்துவது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பங்களின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும், ஓய்வுக்கால வருமானத்தைச் சீராகப் பராமரிக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
6.32 லட்சம் PF உறுப்பினர்களுக்கு பலன் கிடைக்குமா?

இந்தப் புதிய திட்டத்தின் முதற்கட்டத்தில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களும், தங்களது பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பைக் கொண்டவர்களுமான சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் முக்கியப் பயனாளிகளாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வுக்குப் பிறகு ஒரே நேரத்தில் பெரிய தொகையைப் பெற்றுக்கொண்டு அதை எவ்வாறு முதலீடு செய்வது என்ற குழப்பத்தைக் குறைப்பதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் வருமானம் கிடைக்கவும் இந்த SWP திட்டம் உதவும் எனக் கூறப்படுகிறது.

இதன் மூலம் ஓய்வுபெற்றவர்கள் தங்களது சேமிப்பின் மீதான உரிமையைத் தொடர்ந்து வைத்துக்கொண்டே, தேவைக்கேற்ப பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நெகிழ்வான வாய்ப்பு உருவாகியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories