EPFO பென்ஷன்: 10 வருட வேலைக்குப் பின் எவ்வளவு கிடைக்கும்?

First Published | Jan 12, 2025, 4:54 PM IST

EPFO pension calculator: தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS) மூலம், ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை இதைத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

EPFO

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டம் (EPS), இந்தியாவின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.

இத்திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

EPFO rules

1995ஆம் ஆண்டு முதல்:

தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS), 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தைப் பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

EPS ஓய்வூதியத் தகுதிக்கான குறைந்தபட்ச சேவைக் காலம் 10 ஆண்டுகள். குறைந்தபட்சம் 58 வயதைப் பூர்த்தி செய்த பிறகு  ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1,000 பெறலாம். அதிகபட்சமாக மாதம் ரூ. 7,500 ஓய்வூதியம் ஈட்டலாம்.

Tap to resize

EPS pension

குறைந்தபட்ச ஓய்வூதியம்:

2014 முதல், குறைந்தபட்ச EPS பென்ஷன் தொகை மாதம் 1,000 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த ஓய்வூதியத்தை மாதம்தோறும் ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

EPS ஓய்வூதியத்துக்குத் தகுதிபெறத் தேவையான 10 ஆண்டுகள் வேலை செய்த பிறகு EPS உறுப்பினர் எவ்வளவு ஓய்வூதியத்தை எதிர்பார்க்கலாம்? அதற்கான கணக்கீட்டை இப்போது தெரிந்துகொள்ளவோம்.

EPS calculator

பென்ஷன் ஃபார்முலா:

மாதாந்திர ஓய்வூதியம் பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் × ஓய்வூதிய சேவைக் காலம்) / 70

இதில், ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் என்பது கடந்த 60 மாத சம்பளத்தின் சராசரியைக் குறிக்கும். இது அதிகபட்சம் ரூ. 15,000 வரை இருக்கலாம். ஓய்வூதிய சேவைக் காலம் என்பது EPS கணக்கில் பங்களித்த மொத்த ஆண்டுகளைக் குறிக்கிறது.

Pension planning

10 ஆண்டு சேவைக்கு எவ்வளவு பென்ஷன்?

எடுத்துக்காட்டாக, ஒரு பணியாளரின் ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் ரூ.15,000 ஆகவும் ஓய்வூதிய சேவைக் காலம் 10 ஆண்டுகளாகவும் இருந்தால் அவர் பெறக்கூடிய மாதாந்திர ஓய்வூதியத்தைப் பின்வருமாறு கணக்கிடலாம்.

மாதாந்திர ஓய்வூதியம் = (ரூ 15,000 × 10) / 70 = ரூ 2,143

குறைந்தபட்ச சேவைக் காலம் 10 ஆண்டுகள் இருந்தாலும்கூட, ஒரு ஊழியர் ஓய்வூதியத்தைப் பெற முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

Latest Videos

click me!