நிலுவையில் உள்ள அகவிலைப்படி கிடைக்காது? மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி
எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விளைவாக, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்க உள்ளது. ஆனால் அதே நேரத்தில் மற்றொரு கவலையும் எழுந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று தவணைகளாக அகவிலைப்படி நிலுவையில் உள்ளது.
அகவிலைப்படி
அந்தத் தொகை இனி கிடைக்காது என்ற அச்சம் எழுந்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் அவசரகால அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த நிலுவைத் தொகை இனி வழங்கப்படாது என்ற அச்சம் எழுந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 18 மாதங்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. அந்த நிலுவைத் தொகையை இன்னும் மத்திய அரசு ஊழியர்கள் பெறவில்லை. கொரோனா தொற்றுநோய் காலம் முடிந்த பிறகு நிலைமை சீரானவுடன் 18 மாத நிலுவை அகவிலைப்படி வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது.
அகவிலைப்படி நிலுவை
ஆனால், இப்போது அதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை. கடந்த ஆண்டு நிலுவையில் உள்ள அகவிலைப்படி குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய கவுன்சில் (ஊழியர்கள் சார்பு) கூட்டு ஆலோசனைக் குழுவின் செயலாளர் கோபால் மிஸ்ரா கடிதம் எழுதினார்.
மத்திய அரசு அறிவிப்பு
ஆனால் அதன் பிறகும் மத்திய அரசு இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காததால், மூன்று தவணை நிலுவை அகவிலைப்படி இனி கிடைக்காது என்று ஊழியர்கள் கருதுகின்றனர்.
3 தவணை அகவிலைப்படி
மூன்று தவணைகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கினால் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். நிலுவை அகவிலைப்படி வழங்கப்படாவிட்டால் மத்திய அரசுக்கு இந்தத் தொகை மிச்சமாகும். அடுத்த ஆண்டுக்குள் எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்படும்.