வீட்டில் உட்கார்ந்தே ஆன்லைனில் சம்பாதிக்க 10 ஐடியா!

Published : Nov 25, 2024, 01:20 PM ISTUpdated : Nov 25, 2024, 02:01 PM IST

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா? வீட்டில் வசதியாக உட்கார்ந்து கொண்டே வருமானம் ஈட்ட முடியும். பெரிய முயற்சி ஏதும் இல்லாமல் ஆன்லைனில் சம்பாதிப்பதற்கான வழிகளை இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

PREV
110
வீட்டில் உட்கார்ந்தே ஆன்லைனில் சம்பாதிக்க 10 ஐடியா!
Earn Money Online

உங்கள் மொபைல் கேலரியில் அழகிய புகைப்படங்கள் நிறைய இருக்கிறதா? Shutterstock, Adobe Stock போன்ற இணையதளங்களில் அந்தப் புகைப்படங்களைப் பதிவேற்றலாம். ஒவ்வொரு முறை அவை டவுன்லோட் செய்யப்படும் போதும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

210
Earn Money Online

நீங்கள் ஏற்கனவே வாங்கிய பொருட்களில் இருந்தும் பணம் சம்பாதிக்கலாம். Rakuten மற்றும் Honey போன்ற செயலிகள் மூலம் ஆன்லைன் ஆர்டர்களுக்கு கேஷ்பேக் அல்லது தள்ளுபடியைப் பெறலாம்.

310
Earn Money Online

காலெண்டர்கள், டைரி, நோட்புக் போன்ற எளிதாக டவுன்லோட் செய்யக்கூடிய டிஜிட்டல் பொருள்களை உருவாக்கி விற்கலாம். Etsy போன்ற தளங்களில் அவற்றைப் வெளியிட்டால், அவை விற்பனையாகும்போது பணம் கிடைக்கும்.

410
Earn Money Online

InboxDollars போன்ற இணையதளங்களில் விளம்பரங்கள், டிரெய்லர்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக பணம் தருகிறார்கள். நீங்கள் ஏற்கனவே இலவசமாகச் செய்துகொண்டிருக்கும் ஒன்றை இனி பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்றலாம்.

510
Earn Money Online

எழுதி சம்பாதிக்க நீங்கள் பெரிய எழுத்தாளராக இருக்கவேண்டிய அவசியமில்லை. மின்புத்தகங்களை விரைவாக எழுதி Amazon Kindle போன்ற தளங்களில் வெளியிடலாம். உங்கள் புத்தகத்துக்கு ராயல்டியாக பணம் வரத் தொடங்கும்.

610
Earn Money Online

உங்களிடம் பயன்படுத்தாமல் இருக்கும் கருவிகள், உபகரணங்கள் அல்லது துணிகள் உள்ளதா? Fat Llama அல்லது Style Lend போன்ற தளங்களில் அவற்றை வாடகைக்கு விடலாம். நீங்கள் பயன்படுத்தாத பொருள்களைப் பணமாக்க இது எளிதான வழியாகும்.

710
Earn Money Online

Shopify அல்லது Oberlo போன்ற தளங்களில் டிராப்ஷிப்பிங் ஸ்டோரைத் தொடங்கலாம். உங்கள் ஸ்டோரில் ஆர்டர் செய்பவர்களுகுக சப்ளையர்கள் நேரடியாக பொருட்களை அனுப்பிவிடுவார்கள்.

810
Earn Money Online

பயன்படுத்தப்படாத பிராட்பேண்ட் டேட்டா மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம்! Honeygain போன்ற செயலிகள் டேட்டாவை விற்க உதவுகின்றன.

910
Earn Money Online

உங்கள் பிளாக் மற்றும் சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக ஈகார்மர்ஸ் தளங்களில் விற்பனைக்கு உள்ள பொருள்களில் இணைப்புகளைப் பகிர்வதன் மூலம் சம்பாதிக்க முடியும். உங்கள் இணைப்புகள் மூலம் பொருள்களை ஆர்டர் செய்யும் போது எல்லாம் கமிஷன் கிடைக்கும்.

1010
Earn Money Online

Udemy போன்ற தளங்களில் டிஜிட்டல் படிப்புகளை விற்பனை செய்யலாம். இதில், ஏற்கெனவே தயாராக இருக்கும் பாடத்தை உங்கள் பிராண்டுக்கு மாற்றி பதிவிட்டால் போதும். இது பெரிய முயற்சி இல்லாமலே மெய்நிகர் வகுப்பறையை உருவாக்குவது போன்றது.

click me!

Recommended Stories