Business: சம்பளம் போதலையா? அரசு மானியத்துடன் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! எப்படி தெரியுமா?

Published : Dec 19, 2025, 12:00 PM IST

ரெடிமேட் துணி வியாபாரம் குறைந்த முதலீட்டில் நிலையான லாபம் தரும் ஒரு சிறந்த சுயதொழில் வாய்ப்பாகும். அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் கடன் உதவிகளைப் பயன்படுத்தி, மாதம் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டி, சுயசார்பான வாழ்க்கையை உருவாக்கலாம்.

PREV
17
வருமானத்தை பெருக்கும் ஜவுளித்தொழில்

இன்றைய காலத்தில் அதிக நேரம் உழைத்தாலும் சம்பளம் போதாத நிலை பலருக்கு உள்ளது. குடும்பச் செலவுகள், கல்வி, மருத்துவம் என மாதம் முடிவதற்குள் வருமானம் கரைந்து விடுகிறது. இதனால் பெண்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பொறுப்பில் இருப்பவர்கள் சுயதொழில் தொடங்கும் எண்ணத்தில் உள்ளனர். அந்த வகையில், குறைந்த முதலீட்டில் நிலையான லாபம் தரும் தொழிலாக ரெடிமேட் துணி வியாபாரம் சிறந்த தேர்வாக உள்ளது.

27
சந்தோஷம் தரும் தொழில்

உடை என்பது அடிப்படை தேவையாக இருப்பதால், இந்த வியாபாரத்திற்கு எப்போதும் தேவை குறையாது. பண்டிகை, திருமணம், பள்ளி–கல்லூரி, தினசரி பயன்பாடு என அனைத்து வயதினருக்கும் ரெடிமேட் ஆடைகள் தேவைப்படுகிறது. இதனால் சிறிய அளவில் தொடங்கினாலும் வியாபாரம் விரைவில் வளரக்கூடிய தன்மை கொண்டது.

37
ரூ.20,000 முதலீடு போதும்

இந்த தொழிலை ரூ.20,000 முதல் ரூ.30,000 முதலீட்டில் தொடங்கலாம். மொத்த விற்பனையாளர் கடைகளில் இருந்து துணிகளை வாங்கி, சாலையோர கடை, தள்ளுவண்டி அல்லது வீட்டு முன்பாக விற்பனை செய்ய முடியும். அதேபோல் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம்.

47
அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் உதவிகள்
  1. ரெடிமேட் துணி வியாபாரம் தொடங்க விரும்புவோருக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் உள்ளன.
  2. PMEGP (Prime Minister Employment Generation Programme) திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் 25% முதல் 35% வரை மானியமும், நகர்ப்புறங்களில் 15% முதல் 25% வரை மானியமும் வழங்கப்படுகிறது.
  3. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் (NEEDS) மூலம் இளைஞர்களுக்கு கடன் மற்றும் மானிய உதவி கிடைக்கிறது.
  4. மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் தொழில் தொடங்கும் பெண்களுக்கு வங்கிக் கடனுடன் மானியம் வழங்கப்படுகிறது.
  5. மாவட்ட தொழில் மையங்கள் (DIC) மூலம் பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் சலுகை கடன்களும் பெறலாம்.

இந்த மானியங்களை பயன்படுத்தி முதலீட்டு சுமையை குறைத்து தொழிலை தொடங்க முடியும்.

57
ஒரு நாளுக்கு ரூ3000க்கு விற்பனை

ஒரு நாளுக்கு ரூ.2,000–3,000 விற்பனை செய்தாலே, மாதம் ரூ.60,000–70,000 வருமானம் கிடைக்கும். செலவுகளை கழித்த பின் ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை நிகர லாபம் பெற முடியும்.

67
நிலையான எதிர்காலத்தை உறுதியாக உருவாக்கும்

அரசு மானியங்களுடன் தொடங்கக்கூடிய, குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் ரெடிமேட் துணி வியாபாரம், சுயசார்பான வாழ்க்கைக்கான சிறந்த வாய்ப்பாக உள்ளது. உழைப்பும் திட்டமிடலும் இருந்தால், இந்த தொழில் நிலையான எதிர்காலத்தை உறுதியாக உருவாக்கும்.

77
இனி பண கஷ்டமே வராது

இன்றைய சூழலில் சம்பள வேலை ஒருவரின் வாழ்க்கை தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யாத நிலை உருவாகியுள்ளது. அதனால், குறைந்த முதலீட்டில் நிலையான வருமானம் தரக்கூடிய சுயதொழில் அவசியமாகிறது. அந்த வகையில், அரசு மானியங்கள் மற்றும் வங்கி உதவிகளுடன் தொடங்கக்கூடிய ரெடிமேட் துணி வியாபாரம் பாதுகாப்பானதும் வளர்ச்சி வாய்ப்பு கொண்டதுமாக உள்ளது. 

உழைப்பு, சரியான இடத் தேர்வு, தரமான பொருட்கள் மற்றும் எளிய மார்க்கெட்டிங் முறைகள் இருந்தால், இந்த தொழில் மாதம் ரூ.50,000 வரை நிகர வருமானம் தரக்கூடியதாக மாறும். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பொறுப்பில் இருப்பவர்கள் சுயசார்புடன் வாழ இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது. இன்று தொடங்கும் சிறிய முயற்சியே நாளைய நிலையான எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும்.

Read more Photos on
click me!

Recommended Stories