Dream11 Paralyzed By Online Gambling Prohibition Act
மத்திய அரசு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் கேம்களுக்கும் தடை விதிக்கிறது. இதையும் மீறி ஆன்லைன் சூதாட்ட சேவைகளை வழங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்து பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், இந்த சட்டம் மக்களின் உயிரை காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளது.
24
கேமிங் வணிகத்தை நிறுத்தும் ட்ரீம் 11
மத்திய அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டு வந்த நிலையில், மிக பிரபலமான ஆன்லைன் கேம் பெட்டிங் தளமான ட்ரீம் 11 பண கேமிங் வணிகத்தை நிறுத்தவுள்ளது. அந்த நிறுவனத்தின் உள் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ட்ரீம் 11 இன் மொத்த வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு இந்த வணிகத்தில் இருந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் சட்டத்தை மீறி பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்கள் இருந்தால் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் விளம்பரதாரர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
34
ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு
ஆகவே தான் ட்ரீம் 11 வேறு வழியின்றி பணம் செலுத்தி விளையாடும் போட்டிகளை முற்றிலுமாக நிறுத்த உள்ளது. இனிமேல் ட்ரீம் 11, Fancode, Sportz Drip, Cricbuzz மற்றும் Willow TV போன்ற தனது மற்ற வணிகப் பிரிவுகளில் கவனம் செலுத்தும். மேலும் வெளிநாட்டு சந்தைகளில் புதிய கேமிங் வடிவங்களை முயற்சிக்கும். உண்மையான பண கேமிங் நிறுத்தப்படுவதால், நிறுவனத்தில் பெரிய அளவில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம். ஏனெனில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தத் துறையுடன் தொடர்புடையவர்கள்.
நிதியாண்டு 2023 இல் ட்ரீம் 11 இன் வருவாய் ரூ.6,384 கோடியாக அதிகரித்துள்ளது. இது நிதியாண்டு 2022 இல் ரூ.3,841 கோடியாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் 32% அதிகரித்து ரூ.188 கோடியை எட்டியுள்ளது. ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகள் மூலம் பெட்டிங் நிறுவனமான ட்ரீம் 11 பல கோடிகள் கல்லா கட்டி வந்தது. இப்போது மத்திய அரசின் சட்டத்தால் அந்த நிறுவனத்தின் வருவாய் மொத்தமாக முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.