தங்க நகைகளை வாங்கும் போது ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். BIS லோகோ, காரட், தூய்மை மற்றும் 6 இலக்க HUID எண்ணை உறுதி செய்ய வேண்டும். HUID எண்ணை BIS Care App-ல் சரிபார்த்து நகையின் தரத்தை உறுதி செய்யலாம்.
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அதன் தரத்தில் குறைவதில்லை என்ற பாடல்வரிகள் தங்கத்தின் மதிப்பை உணர்த்துகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தரத்தை சோதனை செய்த பிறகே தங்க நகைகளை நாம் வாங்க வேண்டியது கட்டாயமாகிறது. சிறுக சிறுக குருவி சேர்ப்பது போல் சேர்த்து அதனை ஒரு முதலீடாகவே நடுத்தர வர்க்கத்தினர் செய்து வரும் நிலையில் நல்ல தங்கத்தை வாங்கினால் மட்டுமே அது நமக்கு லாபத்தை கொடுக்கும்.போலி நகைகளுக்கு விடையளிக்கும் வகையில் உள்ளது மத்திய அரசு செயல்படுத்தியுள்ள ஹால்மார்க் விதிகள். தரமான தங்க நகைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஹால்மார்க் விதிகளை கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மத்தி அரசு உத்தரவின்படி இப்போது நகைக் கடைகளில் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
24
இதை செய்ய தவறாதீர்!
தங்க நகைகளை வாங்கச்செல்வோர் 18, 22 அல்லது 20 காரட் தங்க நகைகளை வாங்கும் போது, "ஹால்மார்க்" முத்திரை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் நகைகளில் இந்திய தர நிர்ணய பணியகத்தின் (BIS) லோகோ, காரட்டேஜ், தூய்மைக்கான ஃபைன்நெஸ் மற்றும் 6 இலக்க எழுத்துரு (alphanumeric HUID) ஆகியவை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ஹால்மார்க் செய்யப்பட்ட ஒவ்வொரு நகைக்கும் ஒரு தனித்துவமான HUID எண் இருக்கும். இந்திய தர நிர்ணய பணியகம் (BIS), மார்ச் 31, 2023க்குப் பிறகு 6 இலக்க எழுத்துரு ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (HUID) இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் அல்லது தங்கப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
34
தரத்தை செக்பண்ண ஈசியா வழிஇருக்கு
கையில் செல்போன் இருந்தால் போதும் நகையின் தரத்தை ஈசியா செக் செய்யலாம். தொலைபேசியில் BIS Care App-ஐ பதிவிறக்கி, நகையை ஜூம் செய்து HUID-ஐ படிக்கவும். அதன் பயன்பாட்டில் HUID எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது, நகையை ஹால்மார்க் செய்த நகைக் கடைக்காரர், அவர்களின் பதிவு எண், பொருளின் தூய்மை, பொருளின் வகை, அத்துடன் பொருளை சோதித்து ஹால்மார்க் செய்த ஹால்மார்க்கிங் மையத்தின் விவரங்களை நீங்கள் பார்க்கலாம். 6 இலக்க HUID உடன் தங்க நகைகளின் தூய்மை அல்லது ஃபைன்நெஸ் உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் எதிர்காலத்தில் அதற்கான சரியான சந்தை விலையைப் பெற்றுத்தரும்.
தரத்தை சோதனை செய்த போது, அதில் ஏதேனும் குறுக்கீடு அல்லது தவறு இருந்தால் உடனே புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் வாடிக்கையாளர்களுக்கு உரிமை உள்ளது.ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகள், நகையில் குறிக்கப்பட்டதை விட குறைவான தூய்மையுடன் காணப்பட்டால், அதனை வாங்கியவர் இழப்பீடு பெறலாம். அடுத்த முறை நீங்கள் நகை வடிவில் தங்கம் வாங்கும் போது, உண்மையான பொருளை பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. தரத்தை சோதனை செய்து தங்கம் வாங்கினால் நல்லதுதானே!