விமான பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி டிக்கெட் கேன்சல் பண்ணா ஒரு ரூபாய் கூட நஷ்டம் இல்ல.. 100% ரீபண்ட்!

Published : Feb 26, 2026, 05:46 PM IST

விமான டிக்கெட்டுகளை கேன்சல் செய்தால் இனி ஒரு ரூபாய் கூட நஷ்டம் இருக்காது. DGCA கொண்டுவந்துள்ள புதிய வழிகாட்டுதல் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
விமான பயணிகளுக்கு தலைவலி

இந்தியாவில் விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் என பல்வேறு நகரங்களில் இருந்து உள்நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான டிக்கெட்டுகளின் கேன்சல் கட்டணம் பயணிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. டிக்கெட் புக் செய்த சில நிமிடங்களில் தவறுதலாக புக் செய்ததை உணர்ந்து கேன்சல் செய்தால் அதிகப்படியான கட்டணம் பிடித்தம் செய்து வந்தனர்.

24
இனி 100 சதவீதம் ரீபண்ட் கிடைக்கும்

விமானங்களின் டிக்கெட் கேன்சல் மற்றும் ரீபண்ட் தொடர்பாக பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வந்த நிலையில், இது தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதன்படி பயணிகள் விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் அதனை கேன்சல் செய்தால் எந்த வித கூடுதல் கட்டணமும் பிடித்தம் செய்யப்படாது. அதாவது 100 சதவீதம் ரீபண்ட் கிடைக்கும் 48 மணி நேரத்துக்குள் கூடுதல் கட்டணம் இல்லாமல் தேதியை மாற்றம் செய்யலாம்.

34
கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

இந்த 48 மணி நேர சலுகை விமானம் புறப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் டிக்கெட் மாற்றும்போது புதிய தேதிக்கான விமானக்கட்டணம் அதிகமாக இருந்தால் கூடுதல் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. டிக்கெட் புக் செய்தபோது ஏதும் எழுத்துப்பிழை இருப்பது தெரியவந்தால் 48 மணி நேரத்துக்குள் எந்தவித கட்டணமுமின்றி அதனை சரி செய்து கொள்ளலாம்.

44
இனி ஏஜெண்ட்களை காரணம் காட்ட முடியாது

மேலும் பயணிகள் டிக்கெட் ரத்து செய்யும்போது அதற்கான ரீபண்ட் தொகையை விமான நிறுவனங்கள் 14 வேலை நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும் என்றும் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. பயணிகள் டிராவல் ஏஜெண்ட் அல்லது ஆன்லைன் போர்டுகள் வாயிலாக டிக்கெட் புக் செய்திருந்தாலும் ரீபண்ட் தாமதத்திற்கு இனி ஏஜென்ட்களைக் காரணம் காட்ட முடியாது. ரீபண்ட் தொகை பொறுப்பை விமான நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories