வங்கியில் பணம் செலுத்துவது சாதாரண செயலாக இருந்தாலும், சில விதிகளை பின்பற்றாமையால் பிரச்சனை ஏற்படலாம். தவறான டெபாசிட் செய்வது உங்கள் வீட்டுக்கு அதிகாரிகள் வருவதற்கும், கணக்கு விசாரணைக்கு காரணமாக இருக்கலாம்.
வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால், ஒரு நாளில் ரூ.50,000-க்கு மேல் டெபாசிட் செய்தால், பான் கார்டு விவரம் கட்டாயம் ஆகும். இதன்மூலம் அதிக மதிப்பு பரிவர்த்தனைகளை வங்கிகள் பதிவு செய்யும். பொதுவாக சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி வருமான வரித்துறைக்கு தெரிவிக்கும்.
24
டெபாசிட் எச்சரிக்கை
பணத்தின் மூலத்தைக் காட்டாவிட்டால் சிக்கல் வரலாம். கணக்கில் வராத டெபாசிட்கள் கேள்விக்குள்ளாகும். இதுவே நடப்புக் கணக்குகளுக்கு விதிகள் வேறு விதமாக உள்ளது. ஒரு நிதியாண்டில் ரூ.50 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கும்.
34
வருமானவரி விதிகள்
இந்த வரம்பைத் தாண்டினால், வருமானத்திற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். CDM அல்லது ATM மூலமும் பணம் டெபாசிட் செய்யலாம். SBI மற்றும் HDFC வங்கிகளில், CDM மூலம் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்ய வரம்பு உள்ளது.
இந்த வரம்புகள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். கணக்கில் வராத பணம், கருப்புப் பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிவதே வருமான வரித்துறையின் நோக்கமாக இருக்கிறது. வரம்பைத் தாண்டும்போது, பணத்தின் மூலத்தைக் கேட்பார்கள். சரியான ஆவணங்கள் இருந்தால் எந்தப் பயமும் தேவையில்லை.