மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 3 மாத DA அரியர் இந்த மாதம் கிடைக்கும்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத சம்பளத்தில் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும். இதனால் மாத வருமானம் அதிகரிக்கும்.

DA Hike Update

மத்திய அரசு அறிவித்த குட்நியூஸ்:

மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றில் 2 சதவீத அதிகரிப்பை அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும். மார்ச் 28, 2025 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உயர்த்தப்பட்ட தொகையைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

Central employees DA arrears

அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?

அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 2025 சம்பளத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும். ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான நிலுவைத் தொகை மொத்தமாகக் கிடைக்கும்.

அதாவது, ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை முழுவதும் சம்பளத்துடன் வந்துவிடும். இதன் மூலம் ஊழியர்களின் ஏப்ரல் மாத வருமானம் அதிகரிக்கும்.


DA arrears in April 2025 salary

ஏப்ரல் மாதத்தில் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக இருந்தால், அகவிலைப்படி மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.360 உயர்வு இருக்கும், இதன் மூலம் மொத்த நிலுவைத் தொகை ரூ.1,080 ஆகும். அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 என்றால், ஒவ்வொரு மாதமும் ரூ.180 அதிகரிக்கும். இதன்படி, மூன்று மாத மொத்த நிலுவைத் தொகை ரூ.540 ஆகும்.

மத்திய அரசின் சமீபத்திய அகவிலைப்படி உயர்வு மூலம் சுமார் 48.6 லட்சம் மத்திய ஊழியர்களும் 66.5 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,614.04 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.

DA Hike for Central employees

அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது?

அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை-டிசம்பர் 2025 க்குக் கிடைக்கும். அக்டோபர் அல்லது நவம்பர் 2025 இது குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

இது தவிர, 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். இது ஊழியர்களின் சம்பள அமைப்பை மாற்றும். மேலும் அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும்.

ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையைச் சரிபார்க்க, சம்பள ரசீது, வங்கி அறிக்கைகள், ஊழியர்களுக்கான ஆன்லைன் போர்டல்களைப் பார்க்கலாம்.

Latest Videos

click me!