crude oil price hike: எகிறும் கச்சா எண்ணெய் விலை.. பங்குச்சந்தையில் தொடரும் சரிவு

Published : Sep 02, 2026, 04:30 PM IST

crude oil price hike: அமெரிக்கா–ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை 96 டாலரை நெருங்கியது. இதனால் ஹார்முஸ் நீரிணை அச்சம், இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
கச்சா எண்ணெய் விலை உயர்வு

மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றமான சூழல் மற்றும் அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (செப்டம்பர் 2) பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude Oil) விலை ஒரு பேரலுக்கு சுமார் 95–96 டாலர் வரை உயர்ந்துள்ளது.

24
பங்குச்சந்தை சரிவு

இதன் தாக்கமாக இந்திய பங்குச்சந்தையில் Sensex மற்றும் Nifty சரிவை சந்தித்துள்ளது. காலை வர்த்தகத்தில் Nifty 50 சுமார் 0.89% சரிந்து 23,841.40 புள்ளிகளாகவும், BSE Sensex 0.79% குறைந்து 76,333.20 புள்ளிகளாக இருந்தது.

34
ண்ணெய் விநியோகம் பாதிப்பு

குறிப்பாக, உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக தினசரி அதிக அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்கள் சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அமெரிக்கா–ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்து, இந்த முக்கிய கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டால், உலக சந்தைக்கு எண்ணெய் விநியோகம் குறையக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.

44
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள நாட்டுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் 80 சதவீதத்துக்கும் அதிகமான அளவை இறக்குமதி செய்கிறது. எனவே சர்வதேச எண்ணெய் விலை உயர்வு நேரடியாக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  1. எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும்
  2. டாலருக்கான தேவை அதிகரித்து ரூபாய் மீது அழுத்தம் ஏற்படலாம்
  3. பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது
  4. பெட்ரோல், டீசல், எரிபொருள், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் உயர வாய்ப்புள்ளது
  5. போக்குவரத்து செலவு அதிகரிப்பதால் காய்கறிகள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் மறைமுக தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் விமான நிறுவனங்கள், டயர், பெயிண்ட், ரசாயன நிறுவனங்கள் போன்ற அதிக எரிபொருள் செலவு கொண்ட துறைகளின் லாபம் பாதிக்கப்படலாம். இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்து பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய் 100 டாலரைத் தாண்டினால், இந்தியாவின் இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்பு மற்றும் பணவீக்கம் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படலாம் என சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories