இது கடன் அல்ல, கண்ணீர்! கிரெடிட் கார்டு Users கவனிக்கவும்! நேரடியாக பணம் எடுத்தால் சொத்து மொத்தமும் காலி!

Published : Jul 19, 2025, 01:02 PM IST

கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுப்பது அதிக வட்டி மற்றும் கட்டணங்களை விதிக்கும். இது நம்மை கடனில் தள்ளிவிடும். அதற்கு பதிலாக குறைந்த வட்டியில் தனிநபர் கடன் அல்லது வங்கிக் கடன் பெறுவது நல்லது.

PREV
15
கடனில் தள்ளும் கிரெடிட் கார்டுகள்

இன்றைய காலத்தில் கிரெடிட் கார்டு வைத்திருப்பது சகஜமான விஷயமாகிவிட்டது. அவசரச் செலவுகள், ஆன்லைன் வாங்குபவர்கள், ரிவார்டு புள்ளிகள் பெற விரும்புபவர்கள் என பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதனை முறையான விதத்தில் பயன்படுத்தவில்லை என்றால் அது நம்மை கடனுக்குள் தள்ளும் அபாயமுள்ள கருவியாக மாறிவிடும். குறிப்பாக, கிரெடிட் கார்டிலிருந்து நேரடியாக பணம் எடுப்பது என்பது மிகப் பெரிய தவறாகும்.

25
45 சதவீதம் வட்டி

பலர் ஒரு கார்டில் இருந்து பணம் எடுத்து, அதை மற்றொரு கார்டின் கடனை கட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதுதான் பெரும் சிக்கலின் தொடக்கம். ஏனெனில், கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுக்கும் நிமிடத்திலிருந்தே, வட்டி விதிக்க ஆரம்பிக்கப்படுகிறது. இந்த வட்டி சுமார் 35% முதல் 45% வரை இருக்கக்கூடும். இது சாதாரண கடன்களில் வசூலிக்கப்படும் வட்டியைவிட மும்மடங்காகவே அதிகம்.

35
உடனே போடப்படும் வட்டி

இதைவிடக் கடுமையான விஷயம் என்னவென்றால், கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுக்கும்போது வட்டி இல்லாத சலுகைக் காலம் (interest-free period) கிடையாது. பொதுவாக, கார்டில் நேரடி செலவுகள் (பில்லிங் மூலம்) செய்தால் ஒரு 45-50 நாட்கள் வரை வட்டி இல்லாமல் இருக்கலாம். ஆனால் ATM-ல் பணம் எடுத்தாலோ அல்லது நகடாக பணம் பெற்றாலோ, அன்றே வட்டி ஏறத் தொடங்கிவிடும். இதற்குப் பதிலாக குறைந்த வட்டியில் தனிநபர் கடன் அல்லது வங்கி கடன் பெறுவது நல்லது.

45
நஷ்டம் தரும் கடன்

மேலும், கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதில் கட்டணமும் (Cash Withdrawal Fee) வசூலிக்கப்படும். இது பெரும்பாலும் எடுக்கப்படும் தொகையின் 2% - 3% வரை இருக்கும். எனவே, ஒரே பணத்தை வாங்குவதற்கே, பலவிதமான கட்டணங்களும், அதிக வட்டியும் சேர்ந்து, நம்மை அதிக கடனில் தள்ளிவிடும். வங்கிகளைப் பார்த்தால், வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கு 8% - 15% வட்டி இருக்கும் போது, கிரெடிட் கார்டுக்கு மட்டும் 35% - 45% வரை வட்டி ஏற்கப்படுவது மிகுந்த நட்டம் ஏற்படுத்தும்.

55
தவறில்லை, தவறாக பயன்படுத்த கூடாது

அதனால், கிரெடிட் கார்டு வைத்திருப்பது தவறில்லை. ஆனால் அதை நிதானமாக, திட்டமிட்டு பயன்படுத்த வேண்டியது அவசியம். தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று – கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பது. இது நம்மை கடனுக்கு அடிமையாக்கும் ஆரம்ப நிலையாக இருக்கலாம், சுருக்கமாகச் சொன்னால் – கிரெடிட் கார்டு வழியாக பணம் எடுப்பது அவசியமில்லாத சூழலில் தவிர்த்தல் நம்மை அதிக வட்டி சுமையிலிருந்து காக்கும். நிதிநிலை பாதுகாப்பு தேவைப்படும்போது, திட்டமிட்ட வங்கி கடன்கள் அல்லது அவசர நிதி சேமிப்பு பைல் போன்றவற்றை முன்னோக்கிப் பார்த்தல் நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories