7th Pay Commission DA Hike
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படலாம். அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். இதன் பின்னரே ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பணியாளர்களுக்கு பலன் கிடைக்கும். அது செப்டம்பர் இரண்டாம் பாதியில் அறிவிக்கப்படலாம் என்று இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அநேகமாக செப்டம்பர் 18 அல்லது 25 ஆம் தேதிகளில் 3% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DA Hike
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, அகவிலைப்படியில் 3% அதிகரிப்பு இருக்கும், இது தற்போதைய விகிதம் 50% இல் இருந்து 53% ஆக அதிகரிக்கும். இந்த உயர்வு ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும். ஜனவரி மற்றும் ஜூன் 2024-க்கு இடைப்பட்ட AICPI-IW குறியீட்டின் எண்கள், ஜூலை 2024 முதல் ஊழியர்களின் அகவிலைப்படி 3% அதிகரிக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. மே மாதத்தில் 139.9 புள்ளிகளாக இருந்தது. தற்போது 141.4 ஆக அதிகரித்துள்ளது.
Government Employees
இது அகவிலைப்படியின் மதிப்பெண்ணை 53.36 ஆக உயர்த்தியுள்ளது. அதாவது இம்முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும். அகவிலைப்படி உயர்வு மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும். உதாரணமாக அடிப்படைச் சம்பளம் ₹ 18,000 ஆக இருப்பவர்களுக்கு அவர்களின் அகவிலைப்படி ₹ 540 அதிகரிக்கும். அதேசமயம், அடிப்படைச் சம்பளம் ₹ 56,900 உள்ளவர்களுக்கு ₹ 1,707 கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படும்.
Dearness Allowance
அதாவது, அகவிலைப்படியின் விகிதங்கள் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையிலானது ஆகும். பணவீக்கத்தின் அதிகரிப்புடன், ஊழியர்களின் அலவன்சும் அதிகரிக்கிறது. மேலும் அவர்களின் செலவின திறனை பராமரிக்க அதன் கட்டணம் அவசியம். மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத நிலுவைத் தொகை வழங்கப்படும்.
கடன் வாங்கும் விதிகளை அதிரடியாக மாற்றிய ரிசர்வ் வங்கி.. என்ன தெரியுமா?