சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.08 உயர்ந்துள்ளது. அதன்படி, வணிக சிலிண்டர் ரூ.1,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்து வந்த நிலையில் இந்த மாதம் மீண்டும் உயர்ந்துள்ளது.
ஆனால் வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1,118.50க்கு கடந்த சில மாதங்களாக அதே விலையில் நீடித்து வருகிறது.