Cigarette Price Hike 2026 : சிகரெட் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. மே மாதம் முதல் சிகரெட் விலை உயரப்போகுது. ITC, Godfrey Phillips போன்ற இந்தியாவின் பெரிய சிகரெட் கம்பெனிகள் விலையை ஏற்ற முடிவு செய்துள்ளனர். விலை எவ்வளவு உயரும் என இங்கு காணலாம்.
வர்ற மே மாசத்துல இருந்து சிகரெட் விலை சுமார் 17% வரைக்கும் ஏறும்னு எதிர்பார்க்கப்படுது. அதிகமா விற்பனையாகுற பிராண்டுகளோட விலை மொத்தமா மாறப்போகுது. இப்போ ₹115-க்கு விக்கிற Gold Flake Premium பாக்கெட், இனி ₹135-க்கு மேல போகலாம். பிரீமியம் சிகரெட் மட்டுமில்ல, விலை குறைவான சின்ன சிகரெட்டுகளோட விலையும் ஏறுறதுக்கு வாய்ப்பு அதிகம்.
25
சிகரெட் விலை ஏன் ஏறுது?
இதுக்கு முக்கிய காரணம் அரசாங்கம் போட்ட வரிதான். நாடாளுமன்றம் சமீபத்துல 'Central Excise Bill 2025' அப்படிங்கிற ஒரு புது சட்டத்தை நிறைவேத்துச்சு. இதன்படி, சிகரெட் மேல 40% GST வரியோட, கலால் வரியையும் (Excise Duty) அதிகமா போட்டுட்டாங்க. குறிப்பா, 75mm-க்கு மேல நீளமான சிகரெட்டுகள் மேல வரிச்சுமை ரொம்ப அதிகம். இதனால, கம்பெனிகளோட தயாரிப்பு செலவு 22% முதல் 28% வரைக்கும் அதிகரிச்சிருக்கு. இந்த பணத்தை இப்போ கஸ்டமர்ஸ் கிட்ட இருந்துதான் வசூலிக்கப் போறாங்க.
35
சிகரெட் பிரியர்கள் கவலை, முதலீட்டாளர்கள் ஹேப்பி!
ஆச்சரியமா, சிகரெட் விலை ஏறுற நியூஸ் வந்த உடனே, பங்குச் சந்தையில சிகரெட் கம்பெனிகளோட பங்குகள் வேகமா ஏற ஆரம்பிச்சது. ITC பங்குகள் 4% வரைக்கும் உயர்ந்துச்சு. Godfrey Phillips பங்குகள் 7.80% லாபத்துல டிரேட் ஆச்சு. சிகரெட் பழக்கத்தை அவ்வளவு சீக்கிரம் விட முடியாதுங்கிறதுனால, கம்பெனிகள் எவ்வளவு விலை ஏத்துனாலும் மக்கள் அதை வாங்குவாங்கன்னு நிபுணர்கள் சொல்றாங்க. அதனாலதான், வரி ஏறினாலும் இந்த கம்பெனிகளோட லாபம் அதிகரிச்சுட்டே இருக்கு.
இன்னைக்கு, ஏப்ரல் 29 மதியம் 3 மணி நிலவரப்படி, ITC பங்குகள் ₹316.30-க்கும், Godfrey Phillips பங்குகள் ₹2,281.20-க்கும் நல்ல ஏற்றத்தோட டிரேட் ஆகிட்டு இருக்கு. இந்த ரெண்டு பங்குகளோட உயர்வும் முதலீட்டாளர்களை சந்தோஷப்படுத்தியிருக்கு.
55
நிபுணர்கள் என்ன சொல்றாங்க?
ஆரம்பத்துல, விலை உயர்வால் சிகரெட் விற்பனை கொஞ்சம் குறையலாம். ஆனா, அந்த நஷ்டத்தை கம்பெனிகள் ஏத்துன விலையில சரி செஞ்சுடுவாங்கன்னு நிபுணர்கள் நம்புறாங்க. அதாவது, இனி ஸ்மோக்கர்ஸும் தங்களோட மாச பட்ஜெட்டை மறுபடியும் பிளான் பண்ண வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில இருக்கிற தகவல்கள் வெறும் தகவல் நோக்கத்துக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆலோசனையா எடுத்துக்க வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் அபாயங்களுக்கு உட்பட்டவை. எந்தப் பங்குலையும் முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி, உங்க நிதி ஆலோசகர் அல்லது சந்தை நிபுணர்கிட்ட ஆலோசனை கேளுங்க.)
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.