சென்னை-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் பயணம் அறிவிப்பு.. நோட் பண்ணுங்க.!

Published : Sep 29, 2025, 04:44 PM IST

பூஜை பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சென்னை எழும்பூர் மற்றும் திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் சேவையை (06075/06076) அறிவித்துள்ளது.

PREV
14
சென்னை – திருவனந்தபுரம் பண்டிகை சிறப்பு ரயில்

பூஜை பண்டிகையையொட்டி அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே சென்னையிலிருந்து திருவனந்தபுரம் வரை சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரயில் எண் 06075 செப்டம்பர் 30, செவ்வாய்க்கிழமை இரவு 10:15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் மதியம் 02:05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கை அடையும்.

24
முக்கிய நிறுத்தங்கள்

இந்த ரயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் போன்ற முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். கேரள மாநிலத்தில் திருச்சூர் (08:05), ஆலுவா (09:03), எர்ணாகுளம் (09:37), கோட்டயம் (10:40), சங்கனாச்சேரி (10:58), திருவல்லா (11:16), செங்கன்னூர் (11:27), மாவேலிக்கரா (11:40), காயங்குளம் (11:49), கொல்லம் (12:30), வர்கலா சிவகிரி (12:52) வழியாக பயணிகளை இறக்கி, பின்னர் திருவனந்தபுரம் வடக்கை அடையும்.

34
திரும்பும் பயணத்திற்கான ரயில்

திரும்பும் சிறப்பு ரயில் எண் 06076, அக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை மாலை 04:30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கிலிருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10:30 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும். கேரளாவில் வர்கலா (17:00), கொல்லம் (17:27), காயங்குளம் (18:33), திருவல்லா (19:06), கோட்டயம் (19:42), எர்ணாகுளம் (20:55), ஆலுவா (21:22), திருச்சூர் (22:13) ஆகிய முக்கிய நிலையங்கள் நின்று பயணிகளை ஏற்றும்.

44
பெட்டிகள் மற்றும் வசதிகள்

இந்த சிறப்பு ரயிலில் இரண்டு 2-அடுக்கு ஈசி பெட்டிகள், மூன்று 3-அடுக்கு ஈசி பெட்டிகள், எட்டு ஸ்லீப்பர் பெட்டிகள், ஐந்து பொதுப் பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு சிறப்பு பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு சேவை மட்டுமே இயக்கப்படும் இந்த பண்டிகை சிறப்பு ரயில், பயணிகளுக்கு சுலபமான, பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories