மே மாதம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டிருந்தது. உலகளவில் பொருளாதார சூழ்நிலைகள் சீரடைந்ததும், போர் நிலைகள் குறைந்தது, தங்க விலையில் எதிரொலி ஏற்பட்டது. குறிப்பாக கடந்த வாரம் வரை விலை சற்றே குறைந்திருந்தது.
25
சென்னையில் இன்று 22 காரட் தங்க விலை
ஜூன் 2ஆம் தேதி மட்டும் இருமுறை தங்க விலை உயர்ந்தது. காலை நேரத்தில் 22 காரட் தங்கம் கிராமத்திற்கு ரூ.30 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.8,950 ஆக விற்பனையானது. ஆனால் மாலை நேரத்தில் மேலும் விலை உயர்ந்தது, ரூ.9,060 ஆக மாறியது. இதன் தொடர்ச்சியாக இன்று மேலும் விலை உயர்ந்துள்ளது.
35
சென்னையில் ஒரு கிராமுக்கு தங்கத்தின் விலை
சென்னையில் இன்று (ஜூன் 3) ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு கண்டுள்ளது. 22 காரட் தங்கம் கிராமத்திற்கு ரூ.20 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.9,080 ஆகவும், ஒரு சவரன் ரூ.72,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களில் விலை உயர்வும் குறைவும் மாறிக்கொண்டிருந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளதைக் காணலாம்.
18 காரட் தங்கத்திலும் உயர்வு பதிவாகியுள்ளது. இதில் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.7,445 ஆகவும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.58,560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது ஆபரணக் கடைகளில் மாற்றங்களை உருவாக்கியது.
55
இன்று வெள்ளி விலை
வெள்ளி விலையும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.113 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.1,13,000 ஆக உள்ளது. தொடர்ந்து பொருளாதார நிலவரங்கள் மாற்றமடைந்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மேலும் ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்புள்ளது.