Published : Feb 03, 2025, 09:38 AM ISTUpdated : Feb 03, 2025, 09:47 AM IST
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தங்கம் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்களுக்கு நகை வாங்குவது சிரமமாகி வருகிறது.
சரசரவென சரிந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவு குறைந்ததா.?
சர்வதேச சந்தையில் ஏற்பட்டு வரும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலையானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 40ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது . இந்த நிலையில் சரியாக 365 நாட்களில் 22ஆயிரம் ரூபாய் உயர்ந்து தங்கத்தின் விலை 62ஆயிரம் ரூபாயை கடந்து உச்சத்தை தொட்டுள்ளது.
25
ஏறி இறங்கும் தங்கம் விலை
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாள் தோறும் அதிகரித்து வருவதால் இன்னும் ஒரு சில மாதங்களில் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை ஈசியாக தொட்டுவிடும் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள். இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்க நகை எட்டாக்கனியாக மாறியுள்ளது. நகைக்கடைகளில் அடுக்கி வைக்கப்பட்ட நகைகளை வேடிக்கை பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.
35
தங்கத்தில் முதலீடு
அதே நேரம் தங்கம் விலை உயர்வால் ஏற்கனவே தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்தவர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள். தற்போதும் அதிகளவு தங்கத்தை வாங்கி வருகிறார்கள். இதனால் நகைக்கடைகளில் நாள் தோறும் கூட்டம் அலைமோதி வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் உயர் வகுப்பு மக்கள் தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
45
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை
மத்திய பட்ஜெட் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கத்தின் விலையானது ஒரே நாளில் இரண்டு முறை உயர்வை சந்தித்தது. அதன் படி காலையில் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 7,745 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் மீண்டும் உயர்ந்தது. அதன் படி கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 62ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையானது
55
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை
நேற்று தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தங்க வர்த்தக சந்தை தொடங்கவுள்ள நிலையில் தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது.
அதன் படி கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 7705 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 61ஆயிரத்து 640 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.