PF கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு? இன்டர்நெட் இல்லாமலே தெரிந்துகொள்ளலாம்!

Published : Mar 17, 2025, 09:22 AM ISTUpdated : Mar 21, 2025, 09:00 AM IST

இப்போது PF கணக்கில் இருப்புத்தொகையைச் சரிபார்ப்பது மிகவும் எளிதாகிவிட்டது. இதற்காக பல வசதிகளை உள்ளன. ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் அனைத்து விவரங்களையும் நீங்கள் சரிபார்க்கலாம்.

PREV
14
PF கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு? இன்டர்நெட் இல்லாமலே தெரிந்துகொள்ளலாம்!
PF balance checking

சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) ஒரு முக்கியமான சேமிப்பு ஆகும். இது அவர்களின் ஓய்வுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. இருப்பினும், ஊழியர்களின் மனதில் பல கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. நிறுவனம் PF இல் பணத்தை டெபாசிட் செய்கிறதா இல்லையா, எவ்வளவு வட்டி பெறப்படுகிறது, பழைய PF கணக்கிற்கு என்ன ஆனது, பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்று பல விவரங்களை அறிந்துகொள்ள எளிய வழி இருக்கிறது. ஒரு மிஸ்டு கால் மூலமே அனைத்து விவரங்களையும் சரிபார்க்கலாம்.

24
Know your PF Balance Check with a missed call

ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் அறியலாம்

உங்கள் மொபைல் எண் யுனிவர்சல் கணக்கு எண்ணில் (UAN) பதிவு செய்யப்பட்டிருந்தால், 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் PF கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம். ஒரு மிஸ்டு கால் கொடுத்த பிறகு, உங்களுக்கு EPFO கணக்கில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வரும். அதில் உங்கள் PF கணக்கு இருப்பு மற்றும் சமீபத்திய பங்களிப்புகள் பற்றிய தகவல்கள் இருக்கும். இந்தச் சேவை முற்றிலும் இலவசம், ஆனால் இதைப் பயன்படுத்த, UAN செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

34
Check PF Balance through SMS

எஸ்.எஸ்.எம். மூலமாகவும் அறியலாம்!

உங்கள் PF கணக்கு பற்றிய தகவல்களை SMS மூலம் பெற விரும்பினால், 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EPFOHO UAN ENG என தட்டச்சு செய்து கொடுக்கப்பட்ட எண்ணுக்கு அனுப்பவும். இங்கே ENG என்பது ஆங்கில மொழியைக் குறிக்கிறது. தமிழில் தகவல் வேண்டுமென்றால், ENG என்பதற்குப் பதிலாக TAM என்று குறிப்பிடலாம். இந்த வசதி தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் கிடைக்கிறது.

44
Check balance online from EPFO ​​portal

ஆன்லைனில் அறியலாம்!

உங்கள் PF பாஸ்புக்கை ஆன்லைனில் பார்க்க விரும்பினால், EPFO-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தலாம். முதலில் https://www.epfindia.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும். 'Employees' பகுதிக்குச் சென்று 'Member Passbook' என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு உங்கள் UAN மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி, உங்கள் கணக்கைப் பற்றிய முழுமையான தகவல்களைக் காணலாம். பணியாளர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்புகள், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கான வட்டி, மொத்த இருப்புத்தொகை உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories