மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் முன்கூட்டியே 25-ம் தேதியே கிடைக்கப் போகிறது. பாதுகாப்பு, தபால் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஊழியர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும் என நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திடீரென அரசு ஏன் இந்த முடிவை எடுத்தது?
மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இது ஒரு சூப்பர் நியூஸ். இந்த மாசம் சம்பளத்துக்காக நீங்க ரொம்ப நாள் காத்திருக்க வேண்டாம். வழக்கமான தேதிக்கு முன்னாடியே உங்க பேங்க் அக்கவுண்டில் சம்பளம் கிரெடிட் ஆகிடும்.
211
நிதி அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு
நிதி அமைச்சகம் இதுபற்றி ஒரு முக்கியமான உத்தரவை போட்டிருக்கு. இதன்படி, செப்டம்பர் 2026 மாதத்துக்கான சம்பளம் 25-ம் தேதியே ஊழியர்களுக்கு வழங்கப்படும். வழக்கமா மாசக் கடைசியில தான் சம்பளம் வரும். ஆனா, பேங்க் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய பிரச்சனையால அரசு இந்த முடிவை எடுத்திருக்கு.
311
அரசு ஏன் இந்த முடிவை எடுத்தது?
வரப்போகிற வங்கி வேலைநிறுத்தம் தான் சம்பளம் முன்கூட்டியே வர முக்கிய காரணம். செப்டம்பர் 28 முதல் 30 வரை நாடு முழுவதும் தொடர்ந்து மூணு நாள் பேங்க் ஸ்ட்ரைக் நடக்கப் போகுதுன்னு நிதி சேவைகள் துறை சொல்லியிருக்கு.
மாசக் கடைசி நாட்கள்ல வங்கி சேவைகள் முழுமையா முடங்க வாய்ப்பிருக்கு. அந்த நேரத்துல சம்பளம் போட்டா, பணப் பரிவர்த்தனை சிக்கலாகி லட்சக்கணக்கான ஊழியர்கள் கஷ்டப்படுவாங்க. இதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.
511
ஊழியர்கள் சிரமப்படக் கூடாது
ஊழியர்கள் எந்த பணக் கஷ்டமும் படக்கூடாதுங்கறதுக்காக, செப்டம்பர் 23 அன்னைக்கு அரசு ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கு. செப்டம்பர் 25-க்குள் சம்பளத்தை போட்டுடணும்னு தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் தபால் துறையும் கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கு.
611
யாருக்கெல்லாம் இந்த சலுகை?
அரசின் இந்த முடிவால நிறைய ஊழியர்கள் பயன்பெறுவாங்க. பாதுகாப்புத் துறை, தபால் துறை, தொலைத்தொடர்பு துறை உட்பட எல்லா மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
711
செப்டம்பர் 25-ல் சம்பளம்
இதுமட்டுமில்லாம, அரசுக்குக் கீழ் வேலை செய்யும் தொழில் துறை ஊழியர்களுக்கும் செப்டம்பர் 25 அன்னைக்கு சம்பளம் கிடைக்கும். வேலையில் இருக்கிறவங்க மட்டுமில்லாம, ஓய்வுபெற்ற பென்ஷன்தாரர்களுக்கும் இந்த சலுகை நேரடியாக கிடைக்கும்.
811
பேங்க் மற்றும் கணக்கு அலுவலகங்களுக்கு உத்தரவு
25-ம் தேதிக்குள் பென்ஷன் பணத்தை அக்கவுண்டில் போடணும்னு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கும், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகங்களுக்கும் (PAO) தெளிவான உத்தரவு போயிருக்கு. சம்பளம் போடும் எல்லா பேங்க் கிளைகளுக்கும் இதை உடனே தெரிவிக்கணும்னு ரிசர்வ் பேங்கை (RBI) நிதி அமைச்சகம் கேட்டுக்கிட்டு இருக்கு.
911
சம்பளக் கணக்கில் குழப்பம் வருமா?
சம்பளம் முன்கூட்டியே வரும்போது, கணக்கு வழக்குகளில் சில குழப்பங்கள் வரலாம். முன்கூட்டியே சம்பளம் தர்றதால கணக்கில் ஏதாவது தப்பு நடந்தா என்ன பண்றதுன்னு நிறைய ஊழியர்கள் யோசிக்கலாம். இதுபற்றியும் அரசு தெளிவுபடுத்தியிருக்கு.
1011
அக்டோபர் மாத சம்பளத்தில் சரி செய்யப்படும்
இப்படி முன்கூட்டியே சம்பளம் கொடுக்கும்போது ஏதாவது பணக் கணக்கில் வித்தியாசம் வந்தால், அது அடுத்த மாச, அதாவது அக்டோபர் 2026 சம்பளத்தில் கழிக்கப்படும் அல்லது சேர்க்கப்படும்னு உத்தரவில் தெளிவாக சொல்லியிருக்காங்க. இந்த ரூல்ஸ்ல எந்த மாற்றமும் கிடையாது.
1111
இது போனஸ் கிடையாது
முன்கூட்டியே வர்ற இந்த பணத்தை எக்ஸ்ட்ரா சம்பளமாவோ அல்லது போனஸாவோ நினைக்க வேண்டாம்னு அரசு ஊழியர்களுக்கு அட்வைஸ் பண்ணியிருக்கு. ஸ்ட்ரைக் காரணமா எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு சில நாட்களுக்கு முன்னாடி கொடுக்கப்படுற செப்டம்பர் மாத ரெகுலர் சம்பளம் தான் இது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.