தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சுமைகளுக்கான கட்டண விதிமுறைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய முக்கிய தகவல்கள் இங்கே. பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
பேருந்து பயணங்களில் பயணிகள் எடுத்துச் செல்லும் சுமைகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குறிப்பிட்ட விதிமுறைகளை வகுத்துள்ளது. இவை பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் அமல்படுத்தப்படுகின்றன.
24
இதுதான் கட்டணம்
65 செ.மீட்டருக்கு மேல் அளவு கொண்ட டிராலி வகை சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகளுக்கு ஒரு பயணிக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், 20 கிலோவுக்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கும் ஒரு பயணிக்கு இணையான கட்டணம் செலுத்த வேண்டும். வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் 20 கிலோவுக்கு குறைவான சுமைகளுக்கும் இதே கட்டணம் பொருந்தும்.
34
இதை எடுத்துக்கிட்டு போவாதீங்க.!
அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் அல்லது மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் பெரிய சுமைகளும், ஈரமான சுமைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இல்லாமல் தனியாக சுமைகளை எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை.
செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை எடுத்துச் செல்ல வேண்டுமெனில், முன் அனுமதி பெற வேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவது பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான பயணத்தை உறுதி செய்யும்.