இ.எம்.ஐ கட்டலனா உடனே வண்டிய தூக்கிடுவாங்களா? பேங்க் ஜப்தி பற்றிய 4 முக்கிய ரூல்ஸ்!

Published : Nov 02, 2026, 05:02 PM IST

கார் அல்லது பைக் கடனுக்கான மாதத் தவணையை (EMI) எதிர்பாராத சூழல்களால் செலுத்த முடியாதபோது, வங்கிகள் எப்போது வாகனத்தைப் பறிமுதல் செய்யும் மற்றும் கடன் வாங்கியவர்களுக்கான சட்டப்பூர்வ உரிமைகளை தெரிந்துகொள்வோம்.

PREV
14
பைக் லோன் இ.எம்.ஐ சட்ட உரிமைகள்

கார் அல்லது பைக் வாங்குவதற்காக வங்கி மூலம் கடன் பெறும் பலரும், எதிர்பாராத பொருளாதாரச் சிக்கல்களால் மாதத் தவணையை (EMI) செலுத்த முடியாத சூழ்நிலையை எதிர்கொள்வதுண்டு. திடீர் வேலை இழப்பு அல்லது எதிர்பாராத மருத்துவச் செலவுகள் போன்ற காரணங்களால் சில மாதங்கள் EMI கட்ட முடியாமல் போகும்போது, வங்கியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற அச்சம் பலருக்கும் எழுவது இயல்பே. அவ்வாறு குறிப்பிட்ட மாதங்கள் தவணை செலுத்தத் தவறினால் வங்கி எப்போது வாகனத்தைப் பறிமுதல் செய்யும் மற்றும் அதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1 அல்லது 2 மாதங்கள் தவணையைச் செலுத்தத் தவறுவதால் மட்டும் வங்கிகள் உடனடியாக வாகனத்தைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்குவதில்லை. சட்டப்பூர்வமாக வாகனத்தைக் கைப்பற்றும் முறையானது நீண்ட கால அவகாசத்திற்குப் பிறகே மேற்கொள்ளப்படுகிறது.

24
தவணை செலுத்தாத கால கட்டம்

0 முதல் 60 நாட்கள்: ஓரிரு மாதங்கள் EMI கட்டத் தவறினால் வங்கி தரப்பிலிருந்து குறுஞ்செய்தி (SMS) அல்லது இ-மெயில் (Email) மூலம் நினைவூட்டல்கள் மட்டுமே அனுப்பப்படும். இந்த ஆரம்பக் கட்டங்களில் தாமதக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுமே தவிர வாகனப் பறிமுதல் போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படாது.

90 நாட்கள் - தொடர்ந்து 3 மாதங்கள் அதாவது 90 நாட்களுக்கு மேல் நீங்கள் EMI கட்டத் தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வங்கி உங்களுடைய கடன் கணக்கைத் தரம் தாழ்த்தி 'செயலற்ற சொத்து' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

34
வங்கியின் நடவடிக்கைகள்

எழுத்துப்பூர்வ அறிவிப்பு (Notice) - கடன் கணக்கு NPA என்று வகைப்படுத்தப்பட்ட பிறகு, வாகனத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக வங்கி கடன் வாங்கிய நபருக்குக் கட்டாயமாக எழுத்துப்பூர்வமான நோட்டீஸ் அனுப்ப வேண்டும். எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி திடீரென வாகனத்தைப் பறிமுதல் செய்ய வங்கிகளுக்குச் சட்டப்படி அனுமதி கிடையாது.

44
ரிசர்வ் வங்கி (RBI) விதிகள்

கடன் வசூலிக்கும் முகவர்கள் (Recovery Agents) மற்றும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டு நெறிமுறைகளின்படியே செயல்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கடன் வாங்கியவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கச் சில தெளிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன: வங்கியோ அல்லது கடன் மீட்பு முகவர்களோ கடன் வாங்கியவர்களை மிரட்டவோ அல்லது ஒருபோதும் தகாத வார்த்தைகளில் பேசவோ கூடாது.

மீட்பு முகவர்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வாங்கியவர்களைத் தொடர்புகொள்ளவோ அல்லது நேரில் சந்திக்கவோ அனுமதிக்கப்படுகிறார்கள். பொது இடங்களிலோ அல்லது அலுவலகங்களிலோ கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்தும் வகையில் முகவர்கள் நடந்துகொள்ளக் கூடாது. கடன் வாங்கியவர்களைச் சந்திக்கும்போது மீட்பு முகவர்கள் தங்களது முறையான அடையாள அட்டையைக் காண்பிப்பது கட்டாயமான விதிமுறையாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories