முக்கிய அடையாள அட்டையாக இருக்கும் பான் கார்டு வருமான வரி செலுத்தவும் தனிநபர் வருமானத்தைக் கண்காணிக்கவும் அதிக அளவில் பயன்படுகிறது. பான் கார்டில் உள்ள நிரந்தர அடையாள எண் பண பரிவர்த்தனையை கண்காணிப்பதிற்கும் அவசியமாக இருக்கிறது.
ஒவ்வொருவரும் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்துள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நபரின் அனைத்து வரவு செலவு கணக்குகளையும் பான் கார்டு முலம் கண்காணிக்க முடியும். எனவே, ஒன்றுக்கு மேல் பான் கார்டு பயன்படுத்தினால் தண்டனை பெற நேரிடும்.
வருமான வரித்துறை சட்ட விதிகளின்படி ஒன்றுக்கு மேல் பான் கார்டு வைத்திருப்பது குற்றம். எனவே தேவையற்ற தண்டனையைத் தவிர்க்க ஒரு தனிநபரின் பெயரில் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்துக்கொள்வது நல்லது.
ஒரு பான் கார்டுக்கு மேல் இருப்புது தெரியவந்தால் வருமான வரிச்சட்டம்1961 இன் பிரிவு 272B இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதும் கட்டயாம். இதற்கான காலஅவகாசத்தை மத்திய அரசு தொடர்த்து நீட்டித்து வருகிறது. தற்போது வரும் ஜூன் 30ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாததாகிவிடும்.
பான் கார்டு முடங்கினால் வங்கிக்கடன் பெறுவது, வருமான வரி தாக்கல் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களில் சிக்கல் ஏற்படும்.