Budget 2025
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.. இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 8வது பட்ஜெட்டாகும். நாட்டின் பல்வேறு வருமானப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
இதனால்தான் இது எதிர்பார்ப்புகளின் பட்ஜெட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம், வரி அடுக்கு போன்ற விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தும். நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த பல கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Budget 2025
இது தவிர, வருமான வரியிலும் மாற்றங்களைக் காணலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் என்ன நடக்கும்? பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போதுதான் அது தெரியவரும்.. பட்ஜெட்டில் மத்திய அரசு என்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
Budget 2025
வருமான வரியில் மாற்றங்கள்
நாட்டில் 65 சதவீதத்திற்கும் அதிகமான வரி செலுத்துவோர் புதிய வரி முறையை ஏற்றுக்கொண்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறினார். இதன் பொருள், ஒவ்வொரு 3 பேரில் 2 பேர் புதிய வரி விதிப்பின் கீழ் வரி தாக்கல் செய்கிறார்கள். 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் புதிய வரி விதிப்பை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இப்போது புதிய வரி விதிப்பை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதில் அரசாங்கத்தின் கவனம் உள்ளது. இதன் காரணமாக, புதிய வரி விதிப்பில் பல மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.
Budget 2025
கடந்த ஆண்டு, புதிய வரி விதிப்பின் கீழ், நிலையான விலக்கு ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பை அரசாங்கம் இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. நிலையான விலக்கின் வரம்பை ரூ.75,000 லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், 20 சதவீத வரி விகித வரம்பு ரூ.12-15 லட்சத்திலிருந்து ரூ.12-20 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த மாற்றம் ரூ.15-20 லட்சத்திற்கு இடையில் வருமானம் உள்ளவர்களுக்கு பயனளிக்கும்.
Budget 2025
வரி அடுக்குகள்
இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசாங்கம் வரி அடுக்குகளில் மாற்றங்களைச் செய்யலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. ரூ.20 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரி விகிதம் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் நடந்தால், இன்னும் பலர் பழைய வரி முறையிலிருந்து புதிய வரி முறைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.