கோடை வெப்பத்தை தணிக்க குறைந்த விலையில் ஏசி வாங்க விரும்புவோருக்கு உதவும் வகையில், ரூ.40,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஏசி ப்ராண்டுகள் மற்றும் மாடல்கள் பற்றிய தகவல்கள் இங்கே.
குறைந்த விலையில் ஏசி வாங்க விரும்புகிறவர்களுக்கு இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இன்றைய சூழலில் வெப்பத்தால் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வாக ஏசி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. ஆனால், ஏசி விலை அதிகம் என்று எண்ணுபவர்கள் பலர் அதை வாங்க தயங்குகிறார்கள். அதற்கு தீர்வாக ரூ.40,000-க்கும் குறைவான விலையில், சில ப்ராண்டுகளில் தரமான ஏசிகள் சந்தையில் கிடைக்கின்றன.
26
ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஏசிகள்
முதல் முறையாக ஏசி வாங்குபவர்கள் அதிக செலவினத்தை தவிர்த்து, குறைந்த விலையில் நம்பகமான தயாரிப்புகளை தேர்வு செய்யலாம். MarQ, Panasonic, LG போன்ற ப்ராண்டுகள் இப்போது மிகவும் குறைந்த விலையில் ஏசிகளை வழங்கி வருகின்றன.
MarQ FKAC103SFAA: இந்த ஏசி 1 டன் ஸ்பிளிட் வகையைச் சேர்ந்தது. மூன்று ஸ்டார் எனர்ஜி ரேட்டிங்கும், உயர் திறனும் கொண்டது. இதன் விலை சுமார் ₹18,888 மட்டுமே. சிறிய அறைகளுக்கு இது சிறந்த தேர்வு ஆகும்.
36
Panasonic CU-YN12WKYM
பனாசானிக் நிறுவனத்தின் இந்த 1 டன் ஸ்பிளிட் ஏசியும் உயர் தரமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை ₹19,245-க்கே வாங்க முடியும். இது குறைந்த மின்சார செலவில் நல்ல குளிர்ச்சி தரக்கூடியது.
இந்த ஏசி 3 ஸ்டார் ஸ்பிளிட் வகையை சேர்ந்தது. சாதாரண குடும்பங்களுக்கு மிகவும் பொருத்தமானது. இதன் விலை ₹19,499 மட்டுமே. குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் நீண்ட ஆயுளை வாக்களிக்கும் தயாரிப்பாக இது விளங்குகிறது.
56
LG நிறுவனத்தின் அசத்தல் தயாரிப்பு
LG LWA5GW3A: ஏசி உலகில் நம்பகமான LG நிறுவனம் வழங்கும் இந்த 1.5 டன் விண்டோ ஏசி 3 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் கொண்டது. பெரிய அறைகள் மற்றும் ஹாலுக்கு இது மிகச் சிறந்தது. இதன் விலை ₹19,999.
66
விரும்பியதை தேர்வு செய்து அசத்தலாம்
இதில் எதைத் தேர்வு செய்தாலும், குறைந்த செலவில் உங்கள் வீட்டு வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியான சூழலை அனுபவிக்க முடியும். தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் பல சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் இமிஐ விருப்பங்கள் கிடைக்கின்றன. அதனால் ஏசி வாங்க இப்போதே திட்டமிடுங்கள். குறைந்த விலையில் தரமான ஏசி வாங்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.