பிஎஸ்என்எல் வெறும் ரூ.1-க்கு ஒரு மாத இணையம் மற்றும் பேச்சு சேவையை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் 2ஜிபி டேட்டா, அனலிமிடெட் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் அடங்கும்.
ஜியோவை பின்னுக்கு தள்ளும் வகையில் புதிய ஆபரை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல். தொலைத் தொடர்பு துறையில் புதிய புரட்சிக்கு வழிவகுக்கும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சுதந்திர தின சிறப்பு சலுகையாக, வெறும் ரூ.1-க்கு ஒரு மாத இணையம் மற்றும் பேச்சு சேவையை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும், 30 நாட்களுக்கு இந்த சேவையை முழுமையாக பயணிகள் அனுபவிக்க முடியும்.
25
வாடிக்கையாளர்களை கவரந்திழுக்க BSNL திட்டம்
இந்த திட்டத்தின் மூலம், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை பரந்த அளவில் பரப்பும் நோக்கத்தில், மக்களுக்கு மிகக்குறைந்த விலையில், அதிகபட்ச சேவையை வழங்க முயற்சி செய்கிறது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள கிராமப் பகுதிகள் மற்றும் வருவாய் குறைவான மக்களுக்கு இணையம் மற்றும் தொலைபேசி சேவையை எளிதாக அடைய முடியும்.
35
அப்பாடி இவ்ளோ சலுகையா?
இந்த திட்டத்தில் சேரும் பயனாளிகளுக்கு, ஒவ்வொரு நாளும் 2ஜிபி டேட்டா, அனலிமிடெட் குரல் அழைப்பு, மற்றும் 100 எஸ்எம்எஸ், என பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு இலவச சிம் கார்டும் வழங்கப்படுகிறது. இதனைப் பெறுவதற்கு, பிஎஸ்என்எல் கிளைகளில் நேரிலோ, அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்யலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாகவும், மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் பார்க்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில், குறிப்பாக மாணவர்கள், வேலை தேடுவோர், மற்றும் கிராமப்புற மக்களுக்கு செலவிலாக மிகச் சுலபமாக இணையம் மற்றும் தொலைபேசி சேவை தேவைப்படுகிறது. இதை உணர்ந்த பிஎஸ்என்எல், இந்த திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பினரையும் மகிழவைத்துள்ளது.
55
மீண்டும் கிங்காக மாறுமா பிஎஸ்என்எல்?
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ரூ.1 என்ற குறைந்த தொகைக்கே இந்த சேவை வழங்கப்படுவதால், மிகப்பெரிய பயனர் வரவேற்பை இதற்காக எதிர்பார்க்கலாம். இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டால், பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் அதன் பழைய புகழை மீட்டெடுக்க முடியும் என்பதற்கு இத்திட்டம் ஓர் உறுதியான அடையாளமாகும்.